தளபதி வெற்றி கொண்டானுக்கு வெற்றி கிடைக்குமா? நாளைய தீர்ப்பு நாயகனுக்கு நாளை காலை 10.30க்கு தீர்ப்பு!
சென்னை: தளபதி விஜய் நடிப்பில் உருவாகி பொங்கல் ரிலீஸாக நாளை அதாவது ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட படம் ஜன நாயகன். இந்த படம் விஜயின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் படத்தின் ரிலீஸ்க்காக காத்துக் கொண்டு இருந்தார்கள். இப்படி இருக்கும்போது படத்திற்கு சென்சார் கிடைக்காததால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இப்படி இருக்கையில் படத்திற்கான சென்சார் பெரும் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இதனால் மொத்த தமிழ் திரையுலகமும் இந்த தீர்ப்புக்காக காத்துக் கொண்டுள்ளது.
தெலுங்கில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் தான் ஜன நாயகன் படம் என்றாலும், படத்திற்கு சென்சார் தருவதில் சில பிரச்னைகள் இருப்பதாக பேச்சுக்கள் அடிபடுகிறது. இராணுவச் சின்னங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது ஒரு காரணம் என்றும், OM என்ற ஆங்கில வார்த்தை ஓம் என்று இந்து மதத்தை பிரதிபலிப்பது போல இருக்கிறது என்றும், இது மத உணர்வுகளை பாதிக்கும் என்றும் ஒரு காரணம் கூறப்படுவதாக பேச்சுக்கள் அடிபட்டாலும், அறுதியிட்டுச் சொல்லும்படியான தகவல்கள் எதுவும் இல்லை.

சென்சார் வழக்கு: இப்படி இருக்கையில் படத்திற்கு சென்சாருக்கு கடந்த டிசம்பர் மாதம் 18ஆம் தேதி விண்ணப்பித்திருந்தாலும், படத்திற்கு இதுவரை சென்சார் கிடைக்கவில்லை. இது மட்டும் இல்லாமல், இதற்காக படக்குழு தொடுத்த வழக்கும் தீர்ப்பு நாளை காலை அதாவது 9 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தான் வழங்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துவிட்டார். படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கலாம் என்று நீதிமன்றம் தெரிவித்தால், படத்தை வரும் 12ஆம் தேதியோ, 14ஆம் தேதியோ ரிலீஸ் செய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
டிக்கெட் பணம்: ஏற்கனவே ஜன நாயகனுக்கு வெளிநாடுகளில் படத்தின் சென்சார் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கு தயாராக இருந்தது. இந்தியாவில் சென்சார் கிடைக்காததால் உலகம் முழுவதும் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இது மட்டும் இல்லாமல், முன்பதிவு செய்த ரசிகர்களுக்கு டிக்கெட்டுக்கான பணம் திருப்பி கொடுக்கப்பட்டது.

தீர்ப்பு: தமிழ்நாட்டிலும் முதல் நாள் முதல் காட்சி தவிர மற்ற காட்சிகளுக்கான பணம் திருப்பிக் கொடுக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் நாளை காலை வழக்கு தீர்ப்பு என்பதால் தீர்ப்பு படக்குழுவுக்கு சாதகமாக வெளிவருமா என்பது குறித்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு உள்ளார்கள். அதாவது தளபதி வெற்றி கொண்டானுக்கு வெற்றி கிடைக்குமா என்றும் நாளைய தீர்ப்பு நாயகனுக்கு நாளைய தீர்ப்பு சாதகமாக இருக்குமா என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











