ஜன நாயகனுக்கு சென்சார் பிரச்னை.. நடக்கும் உள்ளடி அரசியல் இதுதான்.. விஜய்க்கு நெருக்கமானவர் ஓபன்!

சென்னை: நடிகர் விஜயின் ஜன நாயகன் படத்தை வரும் 9ஆம் தேதி ரிலீஸ் செய்யப்போவதாக படக்குழு அறிவித்து, ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள். ஆனால் படத்திற்கு இதுவரை சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை. இதற்கு பின்னால் அரசியல் இருப்பதாக ரசிகர்கள் கருதுகிறார்கள். இது மட்டும் இல்லாமல், விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் முன்னணி நிர்வாகியாக உள்ள ராஜ்மோகன் அண்மையில் அளித்த பேட்டியில், ஜன நாயகன் படத்திற்கு சென்சார் கிடைப்பதில் உள்ள சிக்கலை வெளிப்படுத்தி உள்ளார்.

அதாவது, ராஜ்மோகன் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், " ஜன நாயகன் படம் சென்சாருக்கு போட்டுக் காட்டப்பட்டு, அவர்கள் சொன்ன சின்ன சின்ன மாற்றங்கள் செய்யப்பட்டுவிட்டது. எல்லா வேலைகளும் முடிந்தது. இப்போது சான்றிதழைக் கொடுப்பது மட்டும் தான் பாக்கி. மத்திய அரசுக்கு கீழ்தான் வருகிறது இந்த சென்சார் சான்று வழங்கும் அமைப்பு. மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருந்தாலும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் உறுப்பினர்களாக உள்ளார்கள்.

Thalapathy Vijay Jana Nayagan Censor Issue Between Politics Says TVK Rajmohan
Photo Credit:

அரசியல்: தமிழ்நாடு அரசு, திமுக அரசு மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவை பார்த்து பயப்படுகிறதா? மத்திய அரசின் உள்ளீட்டால் திமுக அரசு பயப்படுகிறதா என்று தெரியவில்லை. ஒரு படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் கொடுக்க பயப்படுவதை நான் இப்போதுதான் பார்க்கிறேன். மிகப்பெரிய பயத்தில் இருக்கிறார்கள். எவ்வளவு தாமதிக்கிறார்களோ அவ்வளவு தாமதத்திக்கிறார்கள். எல்லா வேலைகளும் முடிந்த பின்னர், யு/ஏ சான்றிதழ் கொடுக்க வேண்டிய படத்திற்கு, சான்றிதழ் கொடுக்காமல் பயப்படுகிறார்கள்.

எம்.ஜி.ஆர்: உலகம் சுற்றும் வாலிபன் படம் வெளியான போது, இதே பிரச்னையைச் செய்தார்கள். போஸ்டருக்கு கூடுதல் வரி போட்டார்கள். படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்த திரையரங்க உரிமையாளர்களை மிரட்டினர். காவல்துறை பாதுகாப்புக்கு ஒத்துழைப்பு தரவில்லை. இப்படி பல வேலைகள் நடைபெற்றது. அதையெல்லாம் கடந்து, படத்தை ரிலீஸ் செய்தார். படம், பெரிய அளவில் வெற்றியும் பெற்றது. அதேபோல் ஜன நாயகன் படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்" என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து விஜய் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. பலரும் படத்திற்கு சென்சார் சான்றிதழ் தராமல் தாமதிப்பதற்கு அரசியல் காரணங்கள் தான் என்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Thalapathy Vijay Jana Nayagan Censor Issue Between Politics Says TVK Rajmohan
Photo Credit:

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X