Jana Nayagan: ஜன நாயகனுக்கு 10.30க்கு தீர்ப்பு.. காத்திருக்கும் விஜய் ரசிகர்கள்.. ரிலீஸ் எப்போது தெரியுமா?
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படமான ஜன நாயகன் படம் கடந்த 9ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று படக்குழு அறிவித்து, அதற்குண்டான வேலைகளைச் செய்து வந்தது. ஆனால் படத்திற்கு சென்சார் கொடுக்கப்படாததால் படம் 9ஆம் தேதி வெளியாகவில்லை. ஆனாலும் படக்குழு தரப்பில் 9ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய பல வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் எதுவும் கை கொடுக்கவில்லை. இதனால் ஜன நாயகன் படம் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
படத்திற்கு சென்சார் நிறுவனம் சென்சார் வழங்க மறுக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதில் ஜன நாயகன் படக்குழுவுக்கு சாதகமான தீர்ப்பு தனி நீதிபதி அமர்வு அளித்தது. ஆனால், உடனே சென்சார் நிறுவனத்தின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டதால், அந்த வழக்கு விசாரணை கடந்த 20ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று அதாவது ஜனவரி 27ஆம் தேதி காலை 10.30 மணிக்கு வழங்கப்படவுள்ளதால், விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எதிர்பார்ப்பு: அதுவும் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அளிக்கலாம் என்றோ, சென்சார் நிறுவனம் படத்தை பார்த்துவிட்டு அதற்குரிய சான்றிதழைக் கொடுக்கட்டும் என்றோ, தீர்ப்பு வந்துவிட்டால், படத்திற்கு சென்சார் சான்றிதழ் அளிப்பது தொடர்பான பணிகள் தொடங்கிவிடும்.தீர்ப்பு ஜன நாயகன் படத்திற்கு சாதகமாக இல்லாமல் அமைந்தால் காத்துக் கொண்டு இருக்கும் ரசிகர்கள் மனதில் இடியை இறக்கியது போல மாறிவிடும். எனவே, தீர்ப்பு என்ன என்பது குறித்த ஆவல் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.
எப்போது ரிலீஸ்: படத்திற்கு சாதகமான தீர்ப்பு வந்தாலும், படம் இந்த வாரத்தில் வெளியாகுமா என்பது சந்தேகம் தான் என்று ஒரு தரப்பினரும், இந்தவாரமே படம் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளது என்று மற்றொரு தரப்பினரும் பேசி வருகிறார்கள். இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு, சென்சார் சான்றிதழும் இன்றே வழங்கப்பட்டாலும், வெளிநாடுகளில் தியேட்டர்களை பெறுவது என்பது உடனே சாத்தியப்பட்டது கிடையாது என்பதால், படத்தின் ரிலீஸ் ஆனது அடுத்த வாரத்தில் தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











