தளபதி திருவிழாவுக்கு போறீங்களா.. இதுதான் டிக்கெட் விலை.. கோடிகளில் விளையாடும் ஜன நாயகன்!
சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள ஜன நாயகன் படம். இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் புரோமோசன் வேலைகள் சிறப்பாக சென்று கொண்டிருக்கின்றன. படத்தின் இசை வெளியீட்டு விழா, மலேசியாவில் வரும் டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான புரோமோசனும் சிறப்பாக சென்று கொண்டுள்ளது. இப்படி இருக்கும்போது, மலேசியாவில் நடைபெற உள்ள இசை வெளியீட்டு விழாவின் டிக்கெட் விலை குறித்த தகவல்கள், இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை, தளபதி திருவிழா என்ற பெயரில் படக்குழு, நடத்துகிறது. இதற்காக பல நடிகர்கள், நடிகைகள் இசைக் கலைஞர்கள், பாடகர்கள் என பலரும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள, மொத்தம் மூன்று வகையான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கட்டண விபரம்: அதில் லெவல் ஒன்று இருக்கைக்கு, இந்திய மதிப்பில் ரூபாய் 6,443.48 கட்டணமாக வசூலிக்கப்படுகிறதாம். அதேபோல், லெவல் இரண்டு இருக்கைக்கு ரூபாய் 4,291.40 ஆக கட்டணம் வசூலிக்கப்படுகிறதாம். அதேபோல், லெவல் மூன்று இருக்கைக்கு ரூபாய், 2,135.42 என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம். இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மொத்தம் 85 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறதாம். அதன்படி இந்திய மதிப்பில், சுமார் 43 கோடிகள் ரசிகர்களிடம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறதாம். இசை வெளியீட்டு விழாவுக்கே இத்தனை கோடிகள் வசூலிக்கப்படுகிறதா என்று பலரும் ஆச்சரியத்தில் இது குறித்து பேசி வருகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











