TVK Vijay: நான் ஆணையிட்டால்.. ஜனநாயகனில் தளபதி கச்சேரி.. ரசிகர்களுக்கு செம சென்ட் ஆஃப் இருக்கு!

சென்னை: விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் படம் அடுத்த ஆண்டு தை பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தை கே.வி.என். புரெடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தை இயக்குநர் ஹெச். விநோத், கதை எழுதி, திரைக்கதை அமைத்து இயக்கி வருகிறார். படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படி இருக்கும்போது, படம் குறித்த சில தகவல்கள் திரையுலகில் வேகமாக பரவி வருகிறது. அந்த தகவல் விஜய்யின் தீவிர ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் தகவலாக உள்ளது.

விஜய் கடந்த ஆண்டு அரசியல் கட்சியைத் தொடங்கி இதுவரை இரண்டு மாநில மாநாடுகளை நடத்தி முடித்துள்ளார். இரண்டு மாநாட்டிலும் அவரது பேச்சு வெறுமனே ரசிகர்களை குஷிப்படுத்துவது போல் இருப்பதாகவும், அரசியலாக அவரது பேச்சில் எதுவும் இல்லை என்று மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் கூறியுள்ளார்கள். இரண்டாவது மாநாட்டில் அவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அங்கிள் என்று அழைத்தது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Thalapathy Vijay Jana Nayagan Movie Has Mass Dance And MGR Song Remix For Send Off to Fans
Photo Credit:

அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ஜனநாயகன் படம் வெளியகாவுள்ளதால், ரசிகர்கள் படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டு உள்ளார்கள். படத்தில் விஜய் உடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தில் புஸ்ஸி ஆனந்த் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இது மட்டும் இல்லாமல் இயக்குநர்களான லோகேஷ் கனகராஜ், அட்லீ மற்றும் நெல்சன் திலீப்குமார் என இவர்கள் மூவரும் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

தளபதி கச்சேரி: ஏற்கனவே படம் குறித்து வெளியான தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வந்த நிலையில் தற்போது ரசிகர்களை குஷிப்படுத்தும் மேலும் சில தகவல்களும் திரைத்துறையில் வேகமாக பரவி வருகிறது. அதாவது படத்தில் விஜய் இதற்கு முன்னர் நடனமாடிய பாடல்களைக் காட்டிலும் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் ஒன்றில், பலரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் நடனம் ஆடியுள்ளாராம். இது மட்டும் இல்லாமல் அந்த பாடலின் வரிகள், கச்சேரி கச்சேரி தளபதி கச்சேரி என்று உருவாக்கப்பட்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Thalapathy Vijay Jana Nayagan Movie Has Mass Dance And MGR Song Remix For Send Off to Fans
Photo Credit:

எம்.ஜி.ஆர் படம்: இது மட்டும் இல்லாமல் படத்தில் மறைந்த நடிகரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் திரைப்பாடலான நான் ஆணையிட்டால் பாடலை ரீமிஸ் செய்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. இந்த பாடல் படத்திலும் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய் தனது கட்சிக்கு வாக்குகளை கவர்வதற்காக தான் ஜனநாயகன் படமே உருவாக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. மொத்தத்தில் ஜன நாயகன் படத்தில் ரசிகர்களுக்கு சென்ட் ஆஃப் கொடுக்கும் விதமாக பல காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X