Jana Nayagan: ஆல் ஏரியாவுலயும் கில்லியா இருக்கனும்.. ஜன நாயகன் தியேட்டரிக்கல் ரைட்ஸ் விற்பனை விபரம்
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படமான ஜன நாயகன் வரும் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இப்படி இருக்கும்போது படத்தின் தியேட்டரிக்கல் ரிலீஸ் உரிமத்தை சில முன்னணி விநியோகஸ்தர்களுக்கு கே.வி.என் நிறுவனம் பிரித்துக் கொடுத்துள்ளது.
ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 27ஆம் தேதி மலேசியாவில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. படத்தின் ஓடிடி விற்பனை என்பது ரூபாய் 121 கோடிகளுக்கு அமேசான் பிரைம் நிறுவனம் வாங்கியதாக தகவல்கள் வெளியானது. மேலும் தமிழ் சினிமாவில் அதிக விலைக்கு ஓடிடி வியாபாரம் நடைபெற்ற படமாகவும் கருதப்படுகிறது. இந்நிலையில் படத்தின் தமிழ்நாடு தியேட்டரிக்கல் உரிமம் யாருக்கு விற்பனை செய்யப்படுகிறது என்ற கேள்வி பலருக்கும் இருந்தது.
முதலில் ஒருவருக்கு விற்பனை செய்யப்படுகிறதா? இல்லை பிரித்துக் கொடுக்கப்படுகிறதா என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. ஆனால் தொடக்கத்தில் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் படத்தின் தியேட்டரிக்கல் உரிமத்தை வாங்க போவதாக தகவல்கள் வெளியானது. ஆனால் சில காரணங்களால் அது நடைபெறவில்லை. இறுதியாக தமிழ்நாடு மற்றும் கேரளா தியேட்டரிக்கல் ரிலீஸ் உரிமத்தை யாருக்கு எல்லாம் விற்பனை செய்தார்கள் என்ற விவரத்தை படக்குழுவே தெரிவித்துள்ளது.

தியேட்டரிக்கல் ரைட்ஸ் விபரம்: அதாவது, " கோவை, நார்த் ஆற்காடு, சவுத் ஆற்காடு, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி எஸ் பிக்சர்ஸ்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மதுரை, திருச்சி மற்றும் சேலம் பகுதிகளை ஃபைவ்ஸ்டார் செந்திலுக்கு விற்பனை செய்துள்ளார்கள். சென்னை ஏரியாவை சினிமாகாரனுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு ஏரியாவை ஒயிட் நைட்ஸ் மற்றும் ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கேரளாவை எஸ்.எஸ்.ஆர் நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஆனால் எத்தனை கோடிகளுக்கு விற்பனை செய்யப்பட்டது என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இத்தனை கோடிகளா?: ஆனால் இது தொடர்பாக பிஸ்மி தனது எக்ஸ் பக்கத்தில், தமிழ் சினிமா வரலாற்றில் தமிழ்நாடு தியேட்டரிகல் ரைட்ஸ் 105 கோடிக்கு விற்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. வழக்கம்போல் வியாபாரத்தில் பென்ச்மார்க்கை கிரியேட் செய்திருக்கிறது விஜய் படம்" என்று பதிவிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications











