Jana Nayagan: ரிலீஸ் ஆனது ராவண மவன்டா பாடல்.. விஜயின் அரசியல் பயணத்துக்காவே உருவாக்கிய பாடலா?
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ஜன நாயகன் படம் வரும் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் டிரைலர் நாளை வெளியாகவுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மறுநாள் ஜீ தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகவுள்ளது. இந்நிலையில் படத்தில் இருந்து ராவணன் மவன்டா என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த பாடலின் வரிகள் விஜயின் அரசியல் பயணத்திற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

பாடல் வரிகளை விவேக் எழுதி உள்ளார். அனிருத் இசையில், அவரே பாடவும் செய்துள்ளார். இந்த பாடல் ஏற்கனவே இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள லிரிக் வீடியோ ரசிகர்கள் மத்தியில் மேலும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது மட்டும் இல்லாமல், பாடலுக்கு விஷுவலாக மலேசியாவில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழா காட்சிகளை இணைத்துள்ளனர்.
ஜன நாயகன்: ஜன நாயகன் படத்தைப் பொறுத்தவரை நடிகர் விஜயின் கடைசி படம். இந்த படத்திற்குப் பின்னர் முழு நேர அரசியலில் களமிறங்குகிறார். இதனால் இந்த படத்திற்கு அவர் ரூபாய் 235 கோடிகள் வரை சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை ஹெச். வினோத் இயக்கி உள்ளார். அதேபோல் படத்தில் நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியா மணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் சுமார் லட்சக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடைபெற்றது.
அரசியல் காரணம்: ராவண மவன்டா பாடலைப் பொறுத்தவரை, பாடல் வரிகள் முழுக்க முழுக்க விஜயின் அரசியல் பயணத்தை கவனித்தில் வைத்துதான் உருவாக்கப்பட்டுள்ளது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக பாடலில் இடம் பெற்றுள்ள வரிகளான, வசனமா எழுதலாம்.. அவன் கதை அதுக்கெல்லாம் மேல, எதிரியா அனுப்புனா சிரிக்கிறான், பழகிட்டான் போல” என்ற வரிகளை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். விஜயின் அரசியல் பயணத்திற்காக பாடலாசிரியர் விவேக் பார்த்து பார்த்து வரிகளை எழுதி உள்ளார். இந்த வரிகள் குறித்து அவரே இசை வெளியீட்டு விழாவில் பேசினார். மொத்தம் இந்த பாடல் ஒரு நிமிடம் 52 வினாடிகள் உருவாக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











