Vettaiyan Audio Launch: வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய்.. தீயாக பரவும் வீடியோ!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் வேட்டையன். இந்தப் படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தினை ஞானவேல் இயக்கியுள்ளார். படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ராணா டகுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தில் இருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அதாவது செப்டம்பர் 20ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழாவில், விஜய் நடிப்பில் வெளியான கத்தி படத்தின் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது. இது வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

தமிழ் சினிமாவில் தற்போது அனிருத் எரா என்றே கூறவேண்டும். அந்த அளவிற்கு, டாப் கதாநாயகர்களின் படங்களுக்கு பிசியாக இசை அமைத்து வருகின்றார். தமிழ் சினிமாவைக் கடந்து, ஹிந்தி, தெலுங்கு சினிமாக்களிலும் தொடர்ந்து இசை அமைத்து வருகின்றார். இன்றைய இணைய உலகத்திற்கு ஏற்ற வகையில், அதாவது ரீல்ஸ்களில் அதிகம் இடம் பெறும் அளவிற்கு வேகமான பீட் பாடல்களை கொடுத்து இந்த எராவை தனதாக்கி அரியாசனம் அமைத்து அமர்ந்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அடுத்த ஆண்டுடன் 50 ஆண்டுகளை எட்டவுள்ளார். தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக மட்டும் இல்லாமல், தொடர்ந்து மார்க்கெட் உள்ள நடிகராக இன்றைக்கும் உள்ளார். மாஸ் ஓப்பனிங், ரஜினியை நம்பி பணம் போட்டால் நிச்சயம் பைசா வசூல் என தயாரிப்பாளர்களுக்கு இன்றும் நம்பிக்கை கொடுத்துக் கொண்டு உள்ளார்.

ஹிட்: இன்றைய சினிமா வசூலை வைத்துத்தான் என முடிவான பின்னர், தமிழ் சினிமாவில் தொடர்ந்து டாப் வசூல் லிஸ்ட்டில் தனது படங்களை வைத்துள்ளார். கடைசியாக இவர் கதாநாயகனாக நடித்த ஜெய்லர் படம் கிட்டத்தட்ட 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்து வருகின்றார்.

சூப்பர் ஸ்டார்: தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் தான். ஆனால் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் விஜய்தான் என அவரது ரசிகர்கள் இணையத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களுடன் சண்டையிட்டுக் கொள்வார்கள். இந்த சண்டை ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆகியோருக்கு இடையில் பனிப்போர் நடைபெற்று வருகின்றது எனக் கூறும் அளவிற்கு, இவர்களது நடவடிக்கைகளும் உள்ளது.
கத்தி: வேட்டையன் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் விஜய் நடிப்பில் வெளியான கத்தி படத்தின் காட்சிகள் திரையிடப்பட்டது. இதற்கு முக்கிய காரணம், லைகா தமிழ் சினிமாவில் முதன்முதலில் தயாரித்தது, கத்தி படத்தைத்தான். இதன் காரணமாகத்தான், வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் கத்தி படத்தின் காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த சம்பவம் ரஜினி ரசிகர்களை கொஞ்சம் அப்செட் ஆக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











