One Year Of LEO: நான் தான்டா லியோ.. தளபதியின் லியோ ரிலீஸ் ஆகி ஒரு வருசம் ஆச்சு! செம ட்ரீட் இருக்கு!

சென்னை: தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு அதாவது 2023ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் லியோ. இந்தப் படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். படத்தினை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்தது. படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில், தீபாவளிக்கு முன்னரே ரிலீஸ் ஆனது. படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் மாபெரும் வெற்றியைப் பெற்றது. பாக்ஸ் ஆஃபீஸில் மட்டும் படம் கிட்டத்தட்ட ரூபாய் 650 கோடிகள் வரை வசூல் செய்ததாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் படம் வெளியாகி இன்றுடன் ஒரு ஆண்டு ஆவதால் படக்குழு "The Chronicles of Leo" என்ற வீடியோவை வெளியிடவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

லியோ படத்தில் விஜய் ஒரே கதாபாத்திரத்தில் இரண்டு மாறுபட்ட தோற்றத்தில் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். இதுமட்டும் இல்லாமல், படத்தில் பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது. விஜய்யின் அப்பாவாக சஞ்சய் தத் நடித்திருந்தார். இதுமட்டும் இல்லாமல் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், மடோனா சாபாஸ்டியன், அனுராக் காய்ஷப், கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த் என எக்கச்சக்க நடிகர்கள் பட்டாளமே நடித்திருந்தனர்.

vijay one year of leo the chronicles of leo

இதில் ஒவ்வொருவருக்கும் தனித்தனி பி.ஜி.எம் அமைத்து அமர்க்களப்படுத்தியிருந்தார் அனிருத். மேலும் படம் முதல் நாளில் பாக்ஸ் ஆஃபீஸில் ரூபாய் 148.5 கோடிகளை வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. படம் 12 நாட்களில் ரூபாய் 500 கோடிகளை அள்ளியது. லியோ படத்தில் அட்டகாசமான அக்‌ஷன் காட்சிகள் இருந்ததாலும் படம், லோகேஷ் கனகராஜின் எல்.சி.யூவுக்குள் இருந்ததாலும் ரிப்பிட் ஆடியன்ஸ் வந்துகொண்டே இருந்தனர். இதனால் படம் தமிழ்நாட்டில் பெரும் வசூலைக் குவித்த மூன்றாவது படமாகவும் மாறியது.

லோகேஷ் கனகராஜ்: படம் ரிலீஸ்க்குப் பின்னர் படத்தின் இரண்டாம் பாதி குறித்து ரசிகர்கள் கலவையான விமர்சனங்களைக் கொடுத்தனர். இது தொடர்பாக பேட்டி ஒன்றில், படத்தின் ஃப்ளாஷ் பேக் மன்சூர் அலிகானின் பார்வையில் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் உண்மையையும் கூறலாம், அல்லது பொய்யையும் கூறியிருக்கலாம் எனக் கூறினார். உடனே ரசிகர்கள் மத்தியில் படத்தில் இடம் பெற்றுள்ளது ஃபேக் ஃப்ளாஷ் பேக் என்ற தகவல் பரவியது. உடனே பலரும் இணையத்தில் கலாய்க்க ஆரம்பித்தனர்.

vijay one year of leo the chronicles of leo

அனிருத்: மேலும் படம் எல்.சி.யூவில் இடம் பெற்றுள்ளதால், படத்தில் விக்ரம் பட கதாபாத்திரங்கள் மற்றும் கைதி பட கதாபாத்திரங்கள் இடம் பெற்றது. இது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸ் கொடுத்தது. படம் முடிந்து வெளியே வரலாம் என ரசிகர்கள் தயாரானபோது விக்ரம் படத்தின் பி.ஜி.எம் மற்றும் லியோ படத்தின் பி.ஜி.எம் என இரண்டையும் சேர்த்து கலவையான இசையைக் கொடுக்க, இது ரசிர்களுக்கு செம மியூசிக் ட்ரீட்டாக அமைந்தது. மேலும் இந்த மியூசிக் பலரது ரிங் டோனாக இன்றுவரை உள்ளது.

vijay one year of leo the chronicles of leo

ட்ரெண்ட்: படம் வெளியாகி இன்றுடன் ஒரு ஆண்டு ஆவதால் ரசிகர்கள் இணையத்தில் , " #1YearOfMegaBlockbusterLeo, #1YearOfIndustryHitLEO , #1YearOfLeo போன்ற ஹேஷ் டேக்குகளை இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதுமட்டும் இல்லாமல், படக்குழு இன்று The Chronicles of Leo என்ற வீடியோவை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனால், ரசிகர்கள், The Chronicles of Leo என்ற ஹேஷ் டேக்கையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

vijay one year of leo the chronicles of leo

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X