Leo Box Office: அக்.29 வரை லியோ ஹவுஸ்ஃபுல்.. 2 நாளில் ரூ.200 கோடியா? அடித்து நொறுக்கிய சாதனை!

சென்னை: விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள லியோ திரைப்படம் 2023 ஆம் ஆண்டில் மிகப்பெரிய வசூலை குவிக்கும் வெற்றிப்படமாக அமைந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய, லியோ படத்தில் த்ரிஷா கிருஷ்ணன் மற்றும் சஞ்சய் தத் ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும் விக்ரம் மற்றும் கைதி ஆகிய படங்களை உள்ளடக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜூன் சினிமா பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாக இப்படம் இருப்பதாக கூறப்படுகிறது.

Thalapathy vijay leo movie day 2 box office collection report

800 தியேட்டர்களில்: விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இத்திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அளவுக்கு மீறிய அளவில் இருந்தது. இதைத் தொடர்ந்து பல சிக்கல்களை கடந்து தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வியாழக்கிழமை சென்னையில் 800 தியேட்டருக்கு மேல் 1176 காட்சிகள் ஒளிபரப்பானது.

அதிரடி காட்டிய லியோ: விஜய் ரசிகர்கள் லியோ திரைப்படத்தை தீபாவளி,பொங்கல் பாண்டிகை போல கொண்டாடினார்கள். தமிழகத்தில் மட்டுமில்லாமல் கேரளா, கர்நாடகாவிலும் லியோ படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்துள்ளது. தமிழகத்தில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி கிடைக்கவில்லை என்றாலும், மற்ற மாநிலத்தில் 4 மணி காட்சியில் படம் வெளியானதால், ரசிகர்கள் படத்தை போட்டி போட்டுக்கொண்டுப் பார்த்தனர்.

ரூ.148.5 கோடி வசூல்: வியாழக்கிழமை வெளியான லியோ திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே 35 கோடியும், கேரளாவில் ரூ.12.50 கோடியும் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தயாரித்த செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இன்று மாலை லியோ முதல் நாள் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி படம் உலக அளவில் 148.5 கோடி ரூபாயை வசூலித்து சாதனைப்படைத்துள்ளது.

Thalapathy vijay leo movie day 2 box office collection report

இரண்டாம் நாள் வசூல்: இந்நிலையில் லியோ திரைப்படம் இரண்டாம் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதில், தமிழில் ரூ48.96 கோடி, தெலுங்கில் ரூ12.9 கோடியும், இந்தியில் ரூ2.8 கோடியும், கன்னடம் ரூ 14 கோடி வசூலாகி உள்ளதாகவும், இந்தியா அளவில் ரூ 36 கோடியை அள்ளி இத்திரைப்படம், உலகஅளவில் ரூ. 100.80 கோடி வசூலை பெற்று இரண்டாம் நாளிலேயே ரூ200கோடிக்கும் மேல் வசூலாகி சாதனை படைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X