விஜய் – மிஷ்கின் கூட்டணியில் இப்படியொரு சம்பவமா… தளபதி 67 அபிஸியல் அப்டேட்டுக்கு ரெடியான லோகேஷ்

சென்னை: விஜய் நடிப்பில் வம்ஷி பைடிபள்ளி இயக்கி வரும் 'வாரிசு' திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.

வாரிசு படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தளபதி 67' ஷூட்டிங்கில் விஜய் கலந்துகொள்ள உள்ளார்.

தளபதி 67 படத்திற்கு பின்னர் விஜய் நடிக்கும் புதிய படம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

இறுதிக்கட்டத்தில் வாரிசு

இறுதிக்கட்டத்தில் வாரிசு

விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை எண்ணூரில் நடைபெற்று வருகிறது. வம்ஷி பைடிபள்ளி இயக்கும் இந்தப் படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகும் வாரிசு படத்துக்கு தமன் இசையமைக்கிறார். தீபாவளி ஸ்பெஷலாக வாரிசு படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என சொல்லப்படுகிறது. குடும்ப பின்னணியில் உருவாகும் வாரிசு படத்தில், விஜய் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அத்தனை கமர்சியல் பேக்கேஜ்ஜும் இருக்கும் என இயக்குநர் வம்ஷி பைடிபள்ளி கூறியுள்ளார்.

விரைவில் தளபதி 67 அப்டேட்

விரைவில் தளபதி 67 அப்டேட்

வாரிசு படம் முடிந்ததும் விரைவில் லோகேஷ் கனகராஜ்ஜுடன் இணைகிறார் விஜய். ஏற்கனவே மாஸ்டர் மூலம் ப்ளாக் பஸ்டர் கொடுத்த இந்தக் கூட்டணி, தளபதி 67 படத்திலும் தரமான சம்பவம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி 67 படம் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், விரைவில் அபிஸியல் அப்டேட் வரவுள்ளதாக சொல்லப்படுகிறது. முழுக்க முழுக்க ஆக்சன் ஜானரில் உருவாகவுள்ள இந்தப் படத்தில் விஜய் கேங்ஸ்டராக நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி 68 இயக்குநர்

தளபதி 68 இயக்குநர்

வாரிசு, தளபதி 67 படங்களைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படத்தை யார் இயக்குவார் என்பது ரசிகர்களின் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க ஏஆர் முருகதாஸ் ரெடியாக இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கலாம் என சொல்லப்படுகிறது. அதேபோல், இயக்குநர் பாண்டிராஜும் தன்னிடம் விஜய்க்கு கதை இருப்பதாக கூறியுள்ளார். இதனிடையே இந்த லிஸ்ட்டில் தற்போது இயக்குநர் மிஷ்கினும் இணைந்துள்ளார்.

ஸ்பை திரில்லர் ஜானரில் விஜய்?

ஸ்பை திரில்லர் ஜானரில் விஜய்?

அஞ்சாதே, துப்பறிவாளன், பிசாசு என தரமான படங்களை இயக்கியுள்ள மிஷ்கின், விஜய்க்காக ஸ்பை திரில்லர் கதை இருப்பதாக முன்பு தெரிவித்திருந்தார். விஜய்யும் மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க ரெடியாக இருந்ததாக அப்பேது சொல்லப்பட்டது. ஆனால், அதன்பிறகு இந்தக் கூட்டணி குறித்து எந்த தகவலும் இல்லாத நிலையில், இப்போது மீண்டும் விஜய் - மிஷ்கின் காம்போ பற்றி தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி லோகேஷ் கனராஜ் இயக்கும் தளபதி 67 படத்திற்கு பிறகு, மிஷ்கின் இயக்கத்தில் விஜய் நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், இந்தப் படம் ஸ்பை திரில்லர் ஜானரில் பிரம்மாண்டமாக உருவாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X