Vijay: வெங்கட் பிரபுவுடன் வேலை செய்யறது.. தளபதி விஜய் என்னங்க இப்படி சொல்லி இருக்காரு!

சென்னை: இன்று அதாவது ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகியுள்ள தமிழ் படங்களில் நண்பன் ஒருவன் வந்த பிறகு என்ற படமும் ஒன்று. இந்த படத்தினை மீசையை முறுக்கு படத்தில் நடித்த நடிகர் அனந்த் இயக்கி நடித்துள்ளார். படத்தினை இயக்குநர் வெங்கட் பிரபுவின் தோழி ஐஸ்வர்யா தயாரித்துள்ளார். நண்பன் ஒருவன் வந்த பிறகு படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில், நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு குறித்து கூறியதை தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் டாப் நடிகராக இருப்பது மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் யாரும் வாங்காத அளவுக்கு சம்பளம் வாங்ககூடிய நடிகர் என்றால் அது நடிகர் விஜய்தான். இவர் ஒரு படத்திற்கு ரூபாய் 200 கோடியில் இருந்து ரூபாய் 250 கோடி வரை சம்பளம் வாங்குகின்றார் என பல்வேறு முன்னணி திரைப் பிரபலங்கள் கூறிவருகின்றனர். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் படத்தில் நடித்து வருகின்றார். இதையடுத்து தனது 69வது படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகின்றது.

Vijay Venkat Prabhu

தி கோட் படத்தின் பெரும்பகுதியான படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. பின்னணி இசை கோர்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. இது தொடர்பான தகவலை படத்தின் இயக்குநர் வெங்கட்ர் பிரபு கடந்த வாரம் தெரிவித்திருந்தார். அதேநேரத்தில் விஜய் தனது ரசிகர் மன்றமாக செயல் பட்டு வந்த விஜய் மக்கள் இயக்கத்தினை, தமிழக வெற்றிக் கழகமாக மாற்றி அரசியலில் களமிறங்கியுள்ளார். மேலும் தான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் மட்டும் நடித்து கொடுத்துவிட்டு சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகி, முழுநேர அரசியலில் ஈடுபடவுள்ளதாக கூறியுள்ளார்.

Vijay Venkat Prabhu

விஜய்: இந்நிலையில் நடிகர் விஜய் தி கோட் படத்தின் முதல் பாதியை பார்த்து விட்டார் எனவும், படம் மிகவும் சிறப்பாக இருக்கின்றது என வெங்கட் பிரபு மற்றும் அவரது உதவி இயக்குநர்களை விஜய் பாராட்டியதாக மூத்த சினிமா பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் முதல் பாதியைத் பார்த்த விஜய் இரண்டாம் பாதியும் சிறப்பாக இருக்கவேண்டும் எனவும் கூறியதாகவும் கூறுகின்றனர்.

Vijay Venkat Prabhu

இதனால் தி கோட் படம் விஜய்க்கே பிடித்துப் போனதால் அவரது ரசிகர்களுக்கும் கட்டாயம் பிடிக்கும் என கூறப்படுகின்றது. இது மட்டும் இல்லாமல் படம் மிகவும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில் விஜய் உட்பட ஒட்டுமொத்த படக்குழுவும் கவனமாக இருப்பதாக தகவல்கள் வெளியானது.

Vijay Venkat Prabhu

செம சிங்க்: இந்நிலையில் நண்பன் ஒருவன் வந்த பிறகு படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநர் வெங்கட் பிரபுவின் தோழியுமான ஐஸ்வர்யா, " எனது பிறந்த நாளின்போது தி கோட் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்குச் சென்று விஜய் சாரைப் பார்த்தேன். அப்போது அவரிடம் பேசும் வாய்ப்பும் கிடைத்தது. விஜய் சாரிடம் வெங்கட் பிரபுவுடன் வேலை செய்வது எப்படி சார் இருக்கின்றது எனக் கேட்டேன். அதற்கு அவர், " செம சிங்க்.. செம சிங்க்.. நான் எப்போதும் ஒரு படத்தில் கமிட் ஆனால் ஒருவருடன் அவ்வளவு எளிதாக சிங்க் ஆகிவிடமாட்டேன். ஆனால் வெங்கட் பிரபுவுடன் சீக்கிரமே சிங்க் ஆகிவிட்டேன். என்னமோ செய்யறான்னு மட்டும் தெரியுது. ஆனால் எப்படினு தெரியல. ஆனால் எனக்கும் வெங்கட் பிரபுவுக்கும் இந்த படம் நிச்சயம் மிகப்பெரிய படமா இருக்கும்னு தோணுது. இரு ஃபேமிலி ஆக்‌ஷன் எண்டர்டைனர் படமா இருக்கும்" எனக் கூறியதாக கூறினார்.

Vijay Venkat Prabhu

மூன்றாவது பாடல்: ஐஸ்வர்யாவின் இந்த பேச்சு விஜய் ரசிகர்களையும் வெங்கட் பிரபு ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. படத்தின் மூன்றாவது பாடல் நாளை அதாவது ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இந்த பாடல் தொடர்பாக இன்று ஒரு அப்டேட் வெளியிடப்பவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X