GOAT Vijay: ரசிகர்களுடன் படம் பார்க்க ப்ளான் போடும் தளபதி.. 2 தியேட்டர் லோடிங்.. ஏற்பாடுகள் தீவிரம்!
சென்னை: தளபதி விஜய் நடிப்பில் அதிகப் பொருட்ச்செலவில் உருவாகியுள்ள தி கோட் படம் நாளை அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தினை தமிழ் நாடு முழுவதும் சுமார் 1100 திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் நிறுவனம் அர்ச்சனா கல்பாத்தியின் தலைமையில் செய்து வருகின்றது. படத்தினை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் சென்னையின் இரண்டு முக்கியத் தியேட்டர்களுக்கு நடிகர் விஜய் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்கவுள்ளதாக கூறப்படுகின்றது. அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
நடிகர் விஜய் நடிப்பில் இருந்து முழுவதுமாக விலகி, முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளார். இதனால், கோட் படம் இல்லாமல், மற்றொரு படத்தில் நடித்துவிட்டு, சினிமாவில் இருந்து விலகவுள்ளார். எனவே விஜய்யின் 68வது படமான கோட் படமும், 69வது படமும் சினிமாவில் விஜய்க்கு ஃபேர்வெல் படங்களாக பார்க்கப்படுகின்றது. இதனால் இந்த இரண்டு படங்களையும் ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர். இதில் நாளை கோட் படம் ரிலீஸ் ஆகவுள்ளதால், படத்தின் டிக்கெட்டுகளை ஒரு வாரத்திற்கு முன்னரே முன் பதிவு செய்து காத்திருக்கும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

படத்தினை அனைவரும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்கத்தினர் பெண்களுக்கு அன்னதானம் வழங்கியதோடு, முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டினை இலவசமாக வழங்கினர். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவியது.

டிக்கெட் விற்பனை: டிக்கெட்டுகள் பல முன்னணி தியேட்டர்களில் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களில் விற்றுத் தீர்ந்தது. குறிப்பாக சென்னை ரோகிணி தியேட்டரில் படத்தின் டிக்கெட் விலை பாப்கார்ன் உடன் சேர்த்து நிர்ணயிக்கப்பட்ட விலையை விடவும் அதிகமாக விற்பனை செய்தனர். ஆனாலும் அந்த டிக்கெட்டுகளையும் ரசிகர்கள் சில மணி நேரங்களில் வாங்கினர். அதேபோல் சென்னையின் மற்றொரு பிரமாண்டமான திரையரங்கம் என்றால், அதில் சத்யம் திரையரங்கத்திற்கு இடம் உண்டு. இந்தத் தியேட்டரில் டிக்கெட் புக்கிங் தொடங்கிய சில மணி நேரங்களில் முதல் இரண்டு நாட்களுக்கான காட்சிகள் அனைத்திற்கும் விற்றுத் தீர்ந்தது.

இரண்டு தியேட்டர்கள்: வழக்கமாக நடிகர்கள் தங்களின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்ப்பார்கள். இறுதியாக வெளியான விக்ரமின் தங்கலான், அதற்கு முன்னர் ரிலீஸ் ஆன ராயன் படங்களை நடிகர்கள் மட்டும் இல்லாமல் படக்குழுவினரும் திரையரங்கில் அமர்ந்து, ரசிகர்களுடன் படம் பார்த்தனர். இந்நிலையில் நடிகர் விஜய்யும் தனது கோட் படத்தினை திரையரங்கில் பார்க்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது. குறிப்பாக சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி அல்லது ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள சத்யம் திரையரங்கில் படம் பார்க்க நடிகர் விஜய் வர அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் கூறப்படுகின்றது. ஆனால் எந்த தியேட்டருக்கு நடிகர் விஜய் செல்லவுள்ளார் என்பதை அவர்தான் முடிவு செய்வார் எனவும் பேச்சுகள் அடிபடுகின்றது. இந்த தகவல் தளபதி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











