விமர்சனங்களை ஏற்கும் விஜய்யின் அரசியல் எண்ட்ரி.. ஒரு வருஷம் ஓவர்.. பொலிடிகல் கேம் ஒர்க் அவுட் ஆகுதா?

சென்னை: நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி தனது ரசிகர் மனறத்தினை, அரசியல் கட்சியாக மாற்றினார். கடந்த சில ஆண்டுகளாகவே, விஜய் அரசியலுக்கு வரவுள்ளார் என்ற பேச்சு அடிபட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு இதே தேதியில், தனது கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தினைத் தொடங்கினார். இவரது ஒரு ஆண்டுகால அரசியல் எப்படி உள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.

விஜய் கட்சி தொடங்கும்போதே வாழ்த்துகளோடு விமர்சனங்களும் எழுந்தது. காரணம் பெயரில் இருந்த ஒற்றுப் பிழை. அதாவது முதலில் தமிழக வெற்றி கழகம் என அறிவிக்கட்டது. அதன் பின்னர் பல தமிழ் பேராசிரியர்கள், இலக்கணம் தெரிந்தவர்கள் ஒற்றுப் பிழை குறித்துக் கூற, விஜய் அதனை ஏற்று, தனது கட்சிப் பெயரினை திருத்தி அறிவித்தார். அதாவது, தமிழக வெற்றிக் கழகம் என அறிவித்தார்.

vijay thalapathy tvk

மேலும் பெயரில் கட்சிப் பெயரில் தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழக என இருப்பதால் இவரது கட்சிக் கொள்கைகள் என்பது, முழுக்க முழுக்க தமிழ்நாட்டில் உள்ள திராவிட அரசியலுக்கு கருத்தியலுக்கு எதிரானது என பேச்சுகள் எழுந்தது. ஆனால் விஜய் அதற்கும் பதில் அளிக்கும் வகையில் தனது கொள்கைத் தலைவர்களாக பெரியார், அம்பேத்கர், காமராசர், வேலுநாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாள் என மொத்தம் ஐந்துபேரை அறிவித்தார்.

கள அரசியல்: விஜய் என்ன தொடர்ந்து சமூக வலைதளங்களிலேயே அரசியல் செய்து கொண்டு உள்ளார். நிவாரண உதவிகள் வழங்கினால் கூட, பாதிக்கப்பட்ட மக்களை தனது பனையூர் அலுவலத்திற்கு வரவழைத்துக் கொடுக்கின்றார் என்ற குற்றச்சாட்டும் விமர்சனமும் எழுந்தது. இந்த விமர்சனங்களுக்கு செயலால் தானே பதில் அளிக்க முடியும் என்பதால், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதேபோல், பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, 900 நாட்களுக்கு மேலாக போராடி கொண்டிருந்த மக்களை நேரில் சந்தித்து தனது ஒத்துழைப்பையும் கூறினார். விஜய், அந்த மக்களைச் சந்தித்த பின்னர்தான், பலரது கவனம் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டத்தின் மீது பலரது கவனம் குவிந்தது.

அரசியலில் ரீ டேக்: இதற்கு முன்னர், தனது கட்சியின் மாநாடு, இடையிடையே பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம், பொறுப்பாளர்கள் நியமனம், என கட்சி சார்ந்தும் கொஞ்சம் பிசியாகத்தான் உள்ளார். ஆனாலும் இதற்கிடையில், மக்களவைப் பொதுத் தேர்தல், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் என இரண்டு தேர்தல்களிலும் தவெக போட்டியிடவில்லை. சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு முழுமையாக உள்ள நிலையில், விஜய்யின் அரசியல் நகர்வுகள் இந்த ஒரு ஆண்டில் எந்த அளவுக்கு உள்ளதோ, அதன் வெளிப்பாடு தேர்தலில் எதிரொலிக்கும். அரசியலில் காலடி எடுத்து வைத்து ஒரு ஆண்டை விஜய் நிறைவு செய்தாலும், அரசியலில் ரீ டேக் என்பது இல்லை என விஜய்க்கு புரிந்திருக்கும். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டும் என தெரிந்து வைத்தால் மட்டும் போதாது, அதசை செயல் படுத்தவும் தயாராக இருக்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X