அரபி மொழியில் எல்லாம் பாட்டு எழுதுறியே …''சூப்பர்''பா… நெகிழ்ந்து போன சிவகார்த்திகேயன் !
சென்னை : அரபி மொழியில் எல்லாம் பாட்டு எழுதுறியே, சூப்பர் பா என விஜய் கூறியதை நினைத்து நினைத்து நெகிழ்ந்து உருகி வருகிறார் சிவகார்த்திகேயன்.
டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.
பூஜா ஹெக்டே லீட் ரோலில் நடித்துள்ள இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் ஏறக்குறைய முடிந்து விட்டது. கடந்த ஆண்டு பீஸ்ட் டைட்டிலுடன் ஃபஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி வைரலாகின.

பீஸ்ட்
பீஸ்ட் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படத்தின் முதல் பாடல் காதலர் தினத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது. எந்த பக்கம் திரும்பினாலும் அரபிக் குத்து பாடலின் தாக்கம் குறையாமல் உள்ளது. பல திரைப்பிரபலங்களும் அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடி அதை வைரலாக்கி வருகின்றனர்.

யூடியூபில் சாதனை
சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஆட்டம் போடவைத்த, அரபிக்குத்து பாடல் வெளியாகி வெறும் 20 நாட்களிலேயே யூடியூபில் 125 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. டாக்டர் திரைப்படத்தில் இடம் பெற்ற செல்லம்மா செல்லம்மா பாடலில் இணைந்து பாடிய அனிருத், ஜோனிடா காந்தி இந்த பாடலிலும் இணைந்து பாடி மற்றுமொரு வெற்றியை கொடுத்துள்ளனர். இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதி இருந்தார்.

அரபிக்குத்து
இந்நிலையில், நேற்று நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயனிடம், நீங்கள் எழுதிய அரபிக்குத்து பாடல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இந்த பாடல் குறித்து விஜய் என்ன சொன்னார் என்று தொகுப்பாளர் கேள்வி கேட்டார். இதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், இந்த பாடல் நீண்ட நாட்களுக்கு முன்பு படமாக்கப்பட்டது என்றும், அப்போது விஜய் எதுவும் சொல்லவில்லை என்றார்.
Recommended Video

அரபிக்குத்து பாடல் சூப்பரா இருக்கு
அந்த பாடலுக்கான ப்ரோமோவின் போதுதான், விஜய் சார் என்னிடம் பேசினார். அரபிக்குத்து பாடல் சூப்பரா இருக்கு, நல்ல எழுதி இருக்க, அரபி மொழியில் எல்லாம் பாட்டு எழுதுறியே என்றார். உடனே சார், அப்படியேல்லாம் இல்லை, நான் பாதி வரி எழுத மற்ற இடத்தை எல்லாம் அனிருத் மியூசிக் போட்டு நிரம்பிவிட்டார் என்றேன். மேலும் ‘அரபுக் குத்து'பாடல் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும், அது மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்றும் அனிருத்திடம் கூறியிருக்கிறார் விஜய்.


Click it and Unblock the Notifications











