தி கோட் படத்தை பார்த்த விஜய் என்ன சொன்னாரு தெரியுமா? ரசிகர்களே ரெடியா?

சென்னை: தமிழ் சினிமாவின் டாப் நடிகராக இருப்பது மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் யாரும் வாங்காத அளவுக்கு சம்பளம் வாங்ககூடிய நடிகர் என்றால் அது நடிகர் விஜய்தான். இவர் ஒரு படத்திற்கு ரூபாய் 200 கோடியில் இருந்து ரூபாய் 250 கோடி வரை சம்பளம் வாங்குகின்றார் என பல்வேறு முன்னணி திரைப் பிரபலங்கள் கூறிவருகின்றனர். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் படத்தில் நடித்து வருகின்றார். இதையடுத்து தனது 69வது படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகின்றது.

தி கோட் படத்தின் பெரும்பகுதியான படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்தது. பின்னணி இசை கோர்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. இது தொடர்பான தகவலை படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

The GOAT Vijay Venkat Prabhu

அதேநேரத்தில் விஜய் தனது ரசிகர் மன்றமாக செயல் பட்டு வந்த விஜய் மக்கள் இயக்கத்தினை, தமிழக வெற்றிக் கழகமாக மாற்றி அரசியலில் களமிறங்கியுள்ளார். மேலும் தான் ஏற்கன்வே ஒப்புக்கொண்ட படங்களில் மட்டும் நடித்து கொடுத்துவிட்டு சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகி, முழுநேர அரசியலில் ஈடுபடவுள்ளதாக கூறியுள்ளார்.

தளபதி 69: இதனால் தி கோட் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் விஜய் சில காலம் ஓய்வு எடுத்துவிட்டு, தனது 69 படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த படத்தின் இயக்குநராக ஹெச். வினோத் இருப்பார் என ஏற்கனவே தகவல்கள் வெளியானது. அந்த படத்தில் அரசியல் கதைக்களமாக இருக்கவேண்டும் என ஹெச். வினோத்திடம் கூறி அதற்காகவே இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது எனவும் கிசுகிசுக்கப்படுகின்றது.

The GOAT Vijay Venkat Prabhu

விஜய்: இந்நிலையில் நடிகர் விஜய் தி கோட் படத்தின் முதல் பாதியை பார்த்து விட்டார் எனவும், படம் மிகவும் சிறப்பாக இருக்கின்றது என வெங்கட் பிரபு மற்றும் அவரது உதவி இயக்குநர்களை விஜய் பாராட்டியதாக மூத்த சினிமா பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் முதல் பாதியைத் பார்த்த விஜய் இரண்டாம் பாதியும் சிறப்பாக இருக்கவேண்டும் எனவும் கூறியதாகவும் கூறுகின்றனர். இதனால் தி கோட் படம் விஜய்க்கே பிடித்துப் போனதால் அவரது ரசிகர்களுக்கும் கட்டாயம் பிடிக்கும் என கூறப்படுகின்றது. இது மட்டும் இல்லாமல் படம் மிகவும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில் விஜய் உட்பட ஒட்டுமொத்த படக்குழுவும் கவனமாக இருப்பதாக கூறுகின்றனர்.

The GOAT Vijay Venkat Prabhu

ப்ளாக் பஸ்டர்: இந்த தகவலைக் கேட்ட விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். குறிப்பாக விஜய் நடிப்பில் இன்னும் இரண்டு படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆகவுள்ளதால், அந்த இரண்டு படங்களும் ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களாக அமையவேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டு உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X