மாஸா என்ட்ரி கொடுத்த விஜய்..என்ன பவ்யம்..என்ன அமைதி..ரசித்து பார்க்கும் ரசிகர்கள் !
சென்னை : நடிகர் விஜய் விமான நிலையத்தில் நடந்து வரும் வீடியோ இணைத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Recommended Video
விஜய், பீஸ்ட் படத்தை தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'தளபதி 66' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு வாரிசு என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வாரிசு படத்திலிருந்து அடுத்தடுத்த மூன்று போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

வாரிசு
வாரிசு திரைப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு, ஜெயசுதா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது.

படப்பிடிப்பு நிறுத்தம்
இதையடுத்து, இரண்டாம் கட்டபடப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்த நிலையில், வாரிசு படத்திலிருந்து விஜய்யின் தோற்றம் மற்றும் படப்பிடிப்பு தள புகைப்படம் வெளியானதால், படப்பிடிப்பு கடந்த 25ந் தேதியுடன் நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது நான்காம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் தொடங்கியுள்ளது.
விஜய்யின் புதிய வீடியோ
இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக விஜய் ஹைதராபாத்திற்கு விமானத்தில் சென்ற ரீசண்ட் வீடியோ இன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. விமான நிலையத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு பவ்வியமாக விஜய் நடந்து வருகிறார். வீடியோவை அவரது ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து டிராண்டாக்கி வருகின்றனர்.இம்மாதம் 25ந் தேதி வரை அங்கு படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது.

தளபதி 67
வாரிசு படத்தை முடித்தவுடன் நடிகர் விஜய், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது விஜய்யின் 67வது படமாகும். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் சமந்தாவிடம் படக்குழுவினர் பேசி வருவதாக கூறப்படுகிறது. சமந்தா இதற்கு முன்னதாக விஜய்யுடன் கத்தி, தெறி மற்றும் மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











