Vijay: நெருக்கமானவரை இழந்த தளபதி விஜய்.. வருத்தப்பட்டு சொன்ன விசயத்தால் ரசிகர்களும் சோகம்!

சென்னை: தளபதி விஜய். தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறியுள்ளார் என்றே கூறவேண்டும். தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ஒரே நடிகரும் இவர்தான். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான கோட் படத்திற்கு இவரது சம்பளம் ரூபாய் 200 கோடி. இந்தத் தகவலை தயாரிப்பாளரே உறுதி செய்தார். இப்படியான நிலையில் இன்று அதாவது செப்டம்பர் 14ஆம் தேதி விஜய் நடிபில் உருவாகவுள்ள கடைசி படமான தளபதி 69வது படத்தின் அறிவிப்பு வெளியாகவுள்ளது. இந்தப் படத்திற்கு விஜய்யின் சம்பளம் ரூபாய் 275 கோடிகள் எனவும், இது மட்டும் இல்லாமல் தயாரிப்பு நிறுவனமே ஜி.எஸ்.டியை செலுத்தவும் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் விஜய் தனது ரசிகர்களைச் சந்தித்து பேசிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

உங்கள் விஜய்யில் ஆரம்பித்து, இளைய தளபதி, தளபதி அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற அளவிற்கு நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே உள்ளார். 50 வயதை எட்டியிருந்தாலும் இப்போதும் சிறப்பாக நடனமாடுவது, சவாலான சண்டைக் காட்சிகளில் தானே நடிப்பது என ரசிகர்களை இப்போதும் மகிழ்வித்து வருகின்றார். இதுமட்டும் இல்லாமல், ஒரு சில காட்சிகளில் விஜய் கொடுக்கும் குட்டி குட்டி எக்ஸ்பிரஸனுக்கு இருக்கும் ரசிகர்கள் ஏராளம். படத்தின் கதை தேவையில்லை, படத்தின் திரைக்கதை தேவையில்லை எங்களுக்கு அந்த எக்ஸ்பிரஷனை பெரிய திரையில் பார்க்கனும் எனச் சொல்லும் ரசிகர்கள் இங்கு பல லட்சம் பேர் உள்ளனர்.

thalapathy vijay thalapathy 69 vijay 69

இப்படியான ரசிகர்கள் பட்டாளத்தை சம்பாதித்து வைத்துள்ள விஜய், இந்த இடத்திற்கு வருதற்கு முன்னர் பல நெருக்கடிகளைச் சந்தித்துள்ளார் என்றே கூறவேண்டும். அரசியல் வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்தாலும், ஆண்டுக்கு ஒரு படமாவது நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இப்படியான நிலையில், இணையத்தில் உலாவரும் வீடியோவில் விஜய் மிகவும் சுவாராஸ்மான அதேநேரத்தில் மிகவும் எமோஷ்னலாகவும் பேசியுள்ளார்.

முதல் ரசிகர்: அதில், ரசிகை ஒருவர் உங்களுடைய முதல் ரசிகரை நியாபகம் இருக்கின்றதா என கேள்வி எழுப்புகின்றார். அதற்கு விஜய், " என்னுடைய முதல் ரசிகரை எனக்கு நியாபகம் இல்லை. ஆனால் எனக்கு முதன் முதலில் ரசிகர் மன்றம் வைத்தவரை நியாபகம் உள்ளது. ஈரோட்டில், மோகன் ராஜ் என்பவர்தான் முதன் முதலில் எனக்கு ரசிகர் மன்றம் தொடங்கினார். அவர் இப்போது உயிரோடு இல்லை" எனக் கூறினார். தளபதி விஜய் இவ்வாறு கூறும்போது மிகவும் வருத்தத்துடன் காணப்பட்டார்.

thalapathy vijay thalapathy 69 vijay 69

கட்சி: இந்த வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள், " ரசிகர்களை மறக்காத நடிகன்" என கமெண்ட் செய்து வருகின்றனர். நடிகர் விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு, அதன் பின்னர் முழுக்க முழுக்க அரசியலில் களமிறங்கவுள்ளார். இதற்காக, விஜய் மக்கள் இயக்கம் என்ற தனது ரசிகர் மன்றத்தை, தமிழக வெற்றிக் கழகம் என அரசியல் கட்சியாக உருமாற்றியுள்ளார். மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டினை நடத்தவும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

thalapathy vijay thalapathy 69 vijay 69

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X