twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இளைய தளபதி விஜய்யின்.. 5 பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் !

    |

    சென்னை : நடிகர் விஜய் தனது திரைப்படத்துறை வாழ்க்கையில் தன்னுடைய சொந்த திறமையால் படிப்படியாக முன்னேறி தற்போது மிகப்பெரிய ரசிகர் பலத்தை கொண்டு சூப்பர் ஸ்டார் அந்தஸ்துடன் வெற்றிகரமாக வலம் வருகிறார்.

    Recommended Video

    1990 TO 2020 THALAPATHY HIT MOVIES | ASHWIN ANALYSE |THALAPATHY BIRTHDAY SPECIAL |FILMIBEAT TAMIL

    தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து வந்த இவருக்கு தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என மொழிகளைத் தாண்டி ரசிகர்கள் உருவாக்கியிருந்தனர்.

    இவ்வாறு இளைய தளபதியாக இருந்த நடிகர் விஜய்யை சூப்பர் ஸ்டார் தளபதி விஜய் ஆக உருவாக்கிய ஐந்து முக்கிய படங்கள் இதோ இந்த லிஸ்டில்.

    பல தடைகளை தகர்த்து வென்ற நாயகன்.. பாக்ஸ் ஆபீஸ் கிங்.. என்றும் விஜய் !பல தடைகளை தகர்த்து வென்ற நாயகன்.. பாக்ஸ் ஆபீஸ் கிங்.. என்றும் விஜய் !

    ராணுவ வீரர்

    ராணுவ வீரர்

    லவ்வர் பாயாக இருந்து ஆக்சன் நடிகராக மாறி கொண்டிருந்த நடிகர் விஜய் ஏ ஆர் முருகதாஸ் உடன் முதன்முதலாக இணைந்து நடித்த துப்பாக்கி படம் இவரது திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய மைல் கல்லாக இருந்து வருகிறது. இந்த படம் தொடங்கும் முதல் காட்சியிலேயே மாஸ் சண்டைக் காட்சிகளுடன் ஆரம்பிக்கும் இந்தப் படம் பல்வேறு கூஸ்பம்ஸ் காட்சிகளை கொண்டு ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆக்சன் ட்ரீட்டாக அமைந்து. இந்திய அளவில் பல வசூல் சாதனைகளை படைத்து உலக அரங்கில் விஜய்யின் பெயரை ஒரு சூப்பர் ஸ்டாராக இந்தப்படம் உயர்த்தியது. மேலும் இந்தப் படம் இந்தியில் அக்சய்குமார் நடிப்பில் "ஹாலிடே" என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி அங்கேயும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

    தண்ணீர் பிரச்சினை

    தண்ணீர் பிரச்சினை

    துப்பாக்கியின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் மற்றும் விஜய் உடனடியாக இணைந்த மற்றுமொரு படம் கத்தி. முதல் படத்தில் ராணுவ வீரராக வந்து நம்மை ரசிக்க வைத்த ஜெகதீஷ். இந்த கத்தியில் கதிரேசன் மற்றும் ஜீவா என இரு தோற்றங்களில் வந்து சமூகப் பிரச்சினைகளையும், தண்ணீர் பிரச்சினைகளையும், அதற்காக போராடும் இளைஞராகவும் விஜய் இருவேறு இரட்டை கதாபாத்திரங்களில் கலக்கும் காமெடி காட்சிகள், வியக்க வைக்கும் சண்டைக் காட்சிகள், என வந்து மிரட்டி எடுத்திருப்பார். இந்தப் படம் தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் கைதி நம்பர் 150 என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் மிகப்பெரிய ஹிட்டடித்து வசூல் மழை பொழிந்தது. இவ்வாறு இரட்டை வேடங்களில் வந்து நம் அனைவரையும் திகைப்படைய வைத்த விஜய்க்கு இந்த படம் ஒரு மிகப் பெரிய சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்றுத்தந்தது.

    பிளாக்பஸ்டர் வெற்றி

    பிளாக்பஸ்டர் வெற்றி

    விஜய்யின் தீவிர ரசிகரான இயக்குனர் அட்லீ குமார் ராஜா ராணி என்ற தனது முதல் படத்திலேயே வெற்றிக் கொடியை நாட்டினார். மேலும் ஒரே ஒரு படத்தை இயக்கிய அறிமுக இயக்குனரும் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் உள்ள ஒரு நடிகரும் இணைந்துள்ள இந்த படம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஒரே ஒரு படம் இயக்கிய இயக்குனரை விஜய் எப்படி இயக்க சம்மதித்தார் என அனைவரும் ஆலோசித்து வந்த வேளையில். யோசிக்காமல் அட்லியின் திறமையை மட்டும் பார்த்து படத்தில் நடித்து வந்த விஜய்க்கு இந்தப்படம் மற்றுமொரு பிளாக்பஸ்டர் வெற்றி படமாக அமைந்து வசூலை வாரி குவித்து பாக்ஸ் ஆபீசை அதிரவைத்தது. மேலும் விஜய்யின் சூப்பர்ஸ்டார் அந்தஸ்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்த இந்த தெறி திரைப்படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் கொண்டாடப்பட்டது.

    சூப்பர் டூப்பர் ஹிட்

    சூப்பர் டூப்பர் ஹிட்

    தெறி படத்தின் வெறித்தனமான வெற்றியை தொடர்ந்து அட்லி மற்றும் தளபதி விஜய் மீண்டும் அடுத்த ஆண்டே இணைந்த திரைப்படம் மெர்சல். விஜய் முதல்முறையாக மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்று வெளியாகி மற்றுமொரு சூப்பர் டூப்பர் ஹிட் படமாக விஜய்க்கு அமைந்தது. மேலும் இந்த படம் பிரான்சில் சிறப்பு அந்தஸ்தைப் பெற்று வெளியாகி, உலகெங்கிலும் வெளியான அனைத்து இடங்களிலும் மிகப்பெரிய வசூல் மழை பொழிந்தது. டாக்டர், மேஜிசியன், தந்தை என மூன்று கதாபாத்திரங்களிலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் ரசிக்க வைத்த விஜய்க்கு படம் நிரந்தர சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்றுத்தந்தது.

    வசூல் மன்னன் தளபதி

    வசூல் மன்னன் தளபதி

    இவ்வாறு துப்பாக்கி, கத்தி,சர்கார் என ஏ ஆர் முருகதாஸ் மற்றும் தெறி, மெர்சல் என அட்லி கூட்டணியில் தொடர்ந்து வெற்றி படங்களிலும், வசூலையும் வாரிக் குவித்த படங்களிலும் நடித்து வந்த இவர் மீண்டும் மூன்றாவது முறையாக இணைந்த படம் பிகில். ஏற்கனவே இரண்டு வெற்றி படங்களை கொடுத்த இந்த கூட்டணி தற்போது மூன்றாவதாக இணைந்திருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கணக்கிலடங்காத எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் பிகில் என்கிற மைக்கல், ராயப்பன் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து அனைவரையும் தியேட்டரில் ஆரவாரப் படுத்தியது. பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் பலராலும் ரசிக்கப்பட்டு தியேட்டரில் பெண்கள் கூட்டம் அலை மோதியது இவ்வாறு பெண்களுக்கான விளையாட்டில் முக்கியத்துவம் கொடுத்து நடித்த இந்தப் படம் விஜய்யின் திரைத்துறை வாழ்க்கையில் அசைக்க முடியாத சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை கொடுத்து மீண்டும் ஒருமுறை உச்சத்தில் தூக்கி நிறுத்தி வைத்தது. இவ்வாறு தொடர்ந்து வெற்றிகளையும், பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்து வந்த வசூல் மன்னன் தளபதி விஜய் தமிழ்த்திரையுலகில் என்றும், யாராலும் அசைக்க முடியாத சூப்பர் ஸ்டார்.

    Read more about: vijay விஜய்
    English summary
    Thalapathy Vijay's 5 biggest blockbuster movies
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X