ரத்தக் கறையுடன் விஜய்.. லீக்கானது பீஸ்ட் படத்தின் ஷாப்பிங் மால் வீடியோ.. செம டென்ஷனில் இயக்குநர்!
சென்னை: டாக்டர் படத்தின் வெற்றியால் சந்தோஷத்தில் இருந்த இயக்குநர் நெல்சன் பயங்கர டென்ஷன் ஆகி உள்ளார்.
தளபதி விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் பிரம்மாண்ட ஷாப்பிங் மால் செட்டப்பில் நடைபெற்று வரும் நிலையில், விஜய் நடித்த காட்சி வீடியோ ஒன்று இணையத்தில் கசிந்து பீஸ்ட் படக்குழுவை அப்செட் ஆக்கி உள்ளது.
லீக்கான அந்த வீடியோவில் தளபதி விஜய் ரத்தக் காயங்களுடன் காணப்படுகிறார்.

லீக்கானது பீஸ்ட் சீன்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்தின் ஷாப்பிங் மால் சீன் ஒன்று இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது. பீஸ்ட் படமே ஷாப்பிங் மாலில் தான் பெரும் பகுதி படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ரத்தக்கறையுடன் விஜய்
வெள்ளை நிற சட்டையை அணிந்து கொண்டு செம ஸ்மார்ட்டாக இருக்கும் தளபதி விஜய்யின் நெஞ்சில் ஏதோ புல்லட் பட்டு ரத்தக் கறை வருவது போல அந்த காட்சி இருப்பதாக தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

38 நொடி வீடியோ
ஷாப்பிங் மாலில் ரத்தக் கறையுடன் விஜய் இருக்கும் BTS வீடியோவின் 38 நொடி வீடியோ இணையத்தில் கசிந்து பீஸ்ட் படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மொபைல் போனே செட்டில் அனுமதிக்கப்படாத நிலையில், யார் இந்த வேலையை பார்த்தார் என விசாரணை நடத்தி வருகிறாராம் இயக்குநர் நெல்சன்.

மாஸ்டர் படமே
தளபதி விஜய்யின் படங்களின் காட்சிகள் இப்படி முன்பே கசிவது வழக்கமான ஒன்றாகவே மாறிவிட்டது. மாஸ்டர் படம் எல்லாம் ரிலீசுக்கு முன்பாக ஒரு மணி நேரம் படமே கசிந்து படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தினாலும், படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது தனிக் கதை.

ஷேர் செய்யாதீங்க
பீஸ்ட் படத்தின் லீக்கான வீடியோவை நெட்டிசன்கள் யாரும் வைரலாக்க வேண்டாம் என்றும் ஷேர் செய்யாதீங்க என்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனாலும், விஜய் படமாச்சே அந்த வீடியோவை பார்த்தவர்கள் மற்றவர்களுக்கு தீயாக ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











