twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தளபதி விஜய்யின் பீஸ்ட் டைட்டில் மாறுகிறதா? வரிச் சலுகையை எதிர்பார்த்தா மாற்றித்தானே ஆகணும்!

    |

    சென்னை: தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தின் டைட்டில் மாற்றப்படும் சூழ்நிலை உருவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி ராமசாமி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்களது நீண்ட நாள் கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

    திரைப்படங்களுக்கு விதிக்கப்படும் 8 சதவீத கேளிக்கை வரியை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைக்க பதிலுக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட அந்த கண்டிஷனால் ஏகப்பட்ட படங்களின் தலைப்புகளும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    என்னப்பா இப்படி ஒரு பேரு...வித்தியாசமான டைட்டிலில் விஜய் ஆன்டனி என்னப்பா இப்படி ஒரு பேரு...வித்தியாசமான டைட்டிலில் விஜய் ஆன்டனி

    வரிச் சலுகை

    வரிச் சலுகை

    LBET எனப்படும் Local Body Entertainment Tax திரைப்படங்களுக்கு 8 சதவீதம் மாநில அரசால் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த கேளிக்கை வரியை நீக்கக் கோரி பல காலமாக தயாரிப்பாளர் தரப்பு அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறது. இந்நிலையில், புதிதாக பதவியேற்றுள்ள முதல்வர் ஸ்டாலினிடமும் அந்த கோரிக்கை முன் வைக்கப்பட்டு இருக்கிறது.

    ஸ்டாலின்

    ஸ்டாலின்

    தயாரிப்பாளர் கவுன்சில் தலைவர் முரளி ராமசாமி முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து இந்த கோரிக்கையை முன் வைத்திருக்கிறார். தமிழ்நாடு முதல்வரும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். விரைவில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறிய அவர் கூடவே ஒரு சூப்பரான கண்டிஷனையும் போட்டுள்ளார்.

    தமிழில் தலைப்பு

    தமிழில் தலைப்பு

    சமீப காலமாக தமிழ் சினிமா படங்களா இல்லை ஆங்கில படங்களா என்றே தெரியாமல் ஏகப்பட்ட ஆங்கில தலைப்புகள் தமிழ் சினிமாவில் வலம் வருகின்றன. இந்நிலையில், தமிழில் தலைப்பு வைக்கப்படும் படங்களுக்கு மட்டுமே அந்த வரி சலுகை என்பதை தெளிவாக கூறி விட்டாராம் ஸ்டாலின்.

    பீஸ்ட் தலைப்பு மாறுமா

    பீஸ்ட் தலைப்பு மாறுமா

    இந்த சந்திப்பை தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கி வரும் பீஸ்ட் படத்தின் தலைப்பு மாற்றப்படுமா? என்கிற கேள்வி சமூக வலைதளங்களில் எழுந்து வருகின்றன. வரிச் சலுகையை தயாரிப்பு தரப்பு எதிர்பார்த்தால் நிச்சயம் டைட்டில் மாற்றப்படும் என்றே பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    பீஸ்ட் டைட்டில் ஏன்

    பீஸ்ட் டைட்டில் ஏன்

    தளபதி விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் புதிய படத்திற்கு பீஸ்ட் என ஆங்கில தலைப்பு வைக்கப்பட்டதற்கு அப்போதே கடும் எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால், பான் இந்தியா படமாக உருவாக இருப்பதால் தான் அந்த தலைப்பு வைக்கப்பட்டு இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன.

    விக்ரமின் கோப்ரா

    விக்ரமின் கோப்ரா

    நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் மட்டுமின்றி சியான் விக்ரமின் கோப்ரா படத்தின் டைட்டிலும் இதன் காரணமாக மாற்றப்படும் வாய்ப்புகள் ஏராளம் எனக் கூறப்படுகிறது. அதிக பொருட்செலவில் உருவாகி வரும் படங்களுக்கு இது போன்ற வரிச் சலுகை கிடைத்தால் நிச்சயம் அதை நோக்கியே தயாரிப்பாளர்கள் செல்வார்கள் என்பது நியாயமான ஒன்று தானே.

    சிவகார்த்திகேயன் படமும்

    சிவகார்த்திகேயன் படமும்

    தல அஜித் பக்காவாக வலிமை என்கிற தமிழ் தலைப்பில் படம் நடித்துள்ளார். தனுஷின் அடுத்த படமும் மாறன் என்கிற தமிழ் தலைப்பில் உருவாகி வருகிறது. இந்த படங்களுக்கு எல்லாம் வரிச் சலுகை கிடைக்கும் நிலை உருவானால் சிவகார்த்திகேயனின் டான் படத்தின் தலைப்பும் மாறும் நிலை உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், வரிச்சலுகை வேண்டாம் என அந்த அந்த படங்களின் தயாரிப்பாளர்கள் உறுதியாக இருந்தால் எந்த மாற்றமும் நிகழாது என்பது தனிக் கதை.

    English summary
    Producer Council head Murali Ramaswamy meet CM Stalin and request to remove LBET. CM Stalin accepted his request with a strong condition.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X