வெறித்தனம்.. பிகில் 50வது நாள் கொண்டாட்டம்.. ட்விட்டரை தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்!

சென்னை: அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளி விருந்தாக வெளியான பிகில் திரைப்படம் திரையரங்குகளில் 50வது நாளை கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது.

பிகில் 50வது நாள் கொண்டாட்டத்தை தியேட்டர்களிலும், ட்விட்டரிலும் வேற லெவலில் கொண்டாடி வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.

#Bigil50thDay என்ற ஹாஷ்டேக்கையும் உருவாக்கி தளபதி ரசிகர்கள் ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

பிகில்

பிகில்

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், இந்துஜா, அம்ரிதா அய்யர், ரெபா மோனிகா, விவேக், யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் உருவான பிகில் திரைப்படம், தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 25ம் தேதி வெளியானது. ஸ்போர்ட்ஸ் கமர்ஷியல் படமாக உருவான பிகில் படத்தில் ராயப்பன், மைக்கேல் என இரண்டு வேடங்களில் விஜய் நடித்து அசத்தியிருந்தார். 300 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்ததாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

100 பிளஸ் ஸ்க்ரீன்ஸ்

தீபாவளியை முன்னிட்டு வெளியான பிகில் படம் 50 நாட்களை கடந்துள்ள நிலையிலும், இன்னமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஓடி வருகிறது என்ற தியேட்டர் லிஸ்ட்டுடன் இந்த ரசிகர் ட்வீட் போட்டுள்ளார்.

பாக்ஸ் ஆஃபிஸ் கிங்

நடிகர் விஜய்யின் படங்களிலேயே அதிக வசூல் செய்த படம், 2019ம் ஆண்டில் வெளியான தமிழ் படங்களில் நம்பர் ஒன் வசூல் செய்த படம் மற்றும் தமிழில் இதுவரை வெளியான படங்களிலேயே தமிழ்நாட்டில் அதிக வசூல் பெற்ற படமாகவும் பிகில் இருக்கிறது என பாக்ஸ் ஆஃபிஸ் நிபுணர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளிலும்

பிகில் தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இலங்கை, கனடா மற்றும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளிலும் 50வது நாளை கடந்துள்ளதாக, இந்த ரசிகர் ட்வீட் போட்டுள்ளார்.

அரை சதம்

விஜய்யின் பிகில் படம் அரை சதம் அடித்துள்ளதாகவும், இன்னும் சதம் அடிக்கும் என்பதை இந்த ரசிகர் தனது ட்வீட் மூலம் சுட்டிக் காட்டியுள்ளார்.

300 கோடி

2019ம் ஆண்டின் நம்பர் ஒன் படம் பிகில் என்றும், இந்தியாவில் 200 கோடி வசூலையும், உலகளவில் 300 கோடிக்கும் அதிகமான வசூலையும் பிகில் ஈட்டியுள்ளதாக இந்த ரசிகர் ட்வீட் போட்டுள்ளார்.

தளபதி விஜய்

விஜய் ஹேட்டர்ஸ்களுக்கு விஜய் டா, தளபதி விஜய் என அண்ணாமலை ரஜினி ஸ்டைலில் பதிலடி கொடுத்துள்ளார் இந்த அதி தீவிர விஜய் ரசிகர்.

கேரளாவில்

தமிழ் நாட்டை போலவே கேரளாவிலும் விஜய்யின் பிகில் திரைப்படம் பல திரையரங்குகளில் 50வது நாள் கொண்டாட்டத்தை அங்குள்ள விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X