விஜய் ரசிகர்களுக்கு செம்ம மாஸ் அப்டேட்: வாரிசு படத்துல அவரோட கேரக்டரும் பேரும் என்னன்னு தெரியுமா?

சென்னை: வாரிசு படத்தில் விஜய் நடிக்கும் கேரக்டர் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாரிசு படத்தில் விஜய் ஆப் டிசைனராக விஜய் ராஜேந்திரன் என்ற பாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

குடும்பப் பின்னணியில் பிரமாண்டமாக உருவாகும் வாரிசு படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யாவும் இணைந்துள்ளது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

வாரிசு திரைப்படம்

வாரிசு திரைப்படம்

'பீஸ்ட்' படத்தை முடித்த கையோடு வம்சி பைடிபல்லி இயக்கும் வாரிசு படத்தில் பிஸியாக இருக்கிறார் விஜய். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷாம், ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது. தமன் இப்படத்திற்கு இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இப்போ இவரும் கமிட்டட்

இப்போ இவரும் கமிட்டட்

இவ்வளவு பெரிய கூட்டணி போதாது என இப்போ எஸ்.ஜே. சூர்யாவும் 'வாரிசு' படத்தில் கமிட் ஆகியுள்ளது, ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே 'மெர்சல்' படத்துல விஜய்க்கு வில்லனா எஸ்.ஜே. சூர்யா மிரட்டிருந்தார். அதனால இப்போ இந்தப் படத்துலயும் அவரே வில்லனா இருக்கலாம்ன்னு சொல்லப்படுது.

இதுதான் விஜய் கெட்டப்பா?

இதுதான் விஜய் கெட்டப்பா?

ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'வாரிசு' படத்தில் விஜய்யின் கேரக்டரின் பெயர் பற்றியும், அவர் என்னவாக வருகிறார் என்ற எக்ஸ்க்ளூசிவான அப்டேட்டும் வெளியாகியுள்ளது. இந்த அப்டேட் படி,, விஜய் ராஜேந்திரன் என்ற பாத்திரத்தில் ஆப் டிசைனராக (App Designer) நடித்து வருகிறாராம். வாரிசு டைட்டில் அறிவிப்போடு வெளியான போஸ்டர்ஸ்ல, விஜய்யோட லுக் செம்ம ஸ்டைலிஷா இருந்தது. இப்போ அதோட பின்னணியும் வெளியாகியுள்ளது, ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது.

அப்போ வாரிசு பொங்கல் தான்!

அப்போ வாரிசு பொங்கல் தான்!

வாரிசு படத்தோட ஷூட்டிங் கிட்டத்தட்ட கடைசிக் கட்டத்துக்கு வந்துட்டதா சொல்லப்படுது. ஏற்கனவே படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸாகும்ன்னு அபிஸியலான அறிவிப்பு வெளியாகிவிட்டது. இந்த நிலையில் இப்போ விஜய் எந்த பாத்திரத்துல, என்ன பெயரில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி, ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X