Don't Miss!
- Education
CISF constable, Driver Recruitment 2023:டிரைவிங் தெரியும்? சி.ஐ.எஸ்.எஃப்.,இல் ரூ.69 ஆயிரத்தில் வேலை...!
- Lifestyle
தக்காளி சாஸ் வெச்சு இத்தனை பொருட்களை சுத்தம் செய்ய முடியுமா? இத படிச்சு நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க...
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
- Automobiles
2-3 லட்ச ரூபா டவுண்பேமென்டிலேயே இந்த எஸ்யூவி கார்களை வாங்கிடலாம்! நம்பவே முடியல.. இந்த காரைகூட வாங்க முடியுமா?
- Sports
முகமது சிராஜை ஏமாற்றுகிறாரா ரோகித்.. நன்றாக ஆடியும் அங்கீகாரம் இல்லை.. மஞ்ச்ரேக்கர் குற்றச்சாட்டு
- News
"ரெக்கார்டு".. 10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்து.. சாதனை செய்த கோவை பெண்.. சபாஷ்
- Technology
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
- Finance
பெண்கள் ஐபிஎல்.. 4670 கோடி கல்லாகட்டிய BCCI.. இங்கேயும் அம்பானி, அதானி..!
எத்தனை வயசானாலும்.. விஜய் எனக்கு குழந்தை தான்..மனம் திறந்த எஸ்.ஏ.சந்திரசேகர் !
சென்னை : விஜய்க்கு எத்தனை வயசானாலும், அவர் என்றும் எனக்கு குழந்தை தான் என எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர். ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ் என முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படத்தை இயக்கி உள்ளார்.
சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். பெரும்பாலும் இவர் இயக்கும் படத்தில் சமூக கருத்துக்கள் மேலோங்கி இருக்கும். இதனால் புரட்சி இயக்குநர் என பெயர் எடுத்தார்.
ராஷ்மிகா
மந்தனா,
ராதிகா
உடன்
வாரிசு
சக்சஸ்
பார்ட்டி..
வெறித்தனம்
காட்டும்
தளபதி
67
லுக்கில்
விஜய்!

எஸ்.ஏ.சந்திரசேகர்
இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராக விளங்கிக் கொண்டிருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர் கடைசியாக ஜெய் நடிப்பில் வெளியான கேப்மாரி என்ற படத்தை இயக்கினார். இதையடுத்து, சமுத்திரக்கனி ஹீரோவாக நடித்து உள்ள நான் கடவுள் இல்லை என்ற படத்தை தற்போது இயக்கியுள்ளார். அதிரடி ஆக்ஷன் கதை களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் இனியா மற்றும் சாக்ஷி அகர்வால் , சரவணன், ரோகினி, இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நான் கடவுள் இல்லை
ஸ்டார் மேக்கர் என்ற நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி உள்ள நான் கடவு இல்லை என்ற படத்தில் டிரைலர் அண்மையில் வெளியாகி மக்களிடம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. இப்படம் அடுத்த மாதம் பிப்ரவரி 3ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இதில் இனியா சமுத்திரக்கனியின் மனைவியாகவும், சாக்ஷிஅகர்வால் காவல்துறை அதிகாரியாகவும் நடித்து சண்டைக காட்சியில் பின்னிபெடல் எடுத்துள்ளார்.

அடுத்த மாதம் ரிலீஸ்
நான் கடவுள் இல்லை திரைப்படம் அடுத்த மாதம் திரையரங்கில் வெளியாக உள்ள நிலையில், பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எஸ்.ஏ.சந்திரசேகர், படம் குறித்து பல சுவாரசியமான தகவலை பகிர்ந்து கொண்டார். எஸ்.ஏ.சந்திரசேகரை பேட்டி எடுத்த, வனிதா விஜயகுமார், விஜய்க்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை என்று கேட்டார். இதற்கு பதிலளித்த எஸ்.ஏ.சந்திரசேகர்.

என்னைக்குமே குழந்தைதான்
பொதுவாக ஆண் பிள்ளைகளுக்கு அம்மாவை தான் மிகவும் பிடிக்கும். ஆனால் என் மகன் விஜய்க்கு என்னையத்தான் மிகவும் பிடிக்கும். ஆனால், நாங்க இருவரும் அதிகமாக பேசிக்கொள்ளமாட்டோம். பிரச்சனை விஜய்யிடம் இல்லை என்னிடம் தான் பிரச்சனை இருக்கிறது. இன்று விஜய் பெரிய அளவுக்கு வளர்ந்திருக்கலாம் ஆனால், அவர் எனக்கு எப்போதும் என் குழந்தை தான் என்று விஜய் குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் மனம் திறந்து பேசினார்.