நண்பர்களுடன் விஜய் வீடியோ காலில் அரட்டை.. வைரலாகும் புகைப்படம்!
சென்னை: இந்தியாவில் பலரும் ஃப்ரெண்ட்ஷிப்டே வாழ்த்துக்களை கூறி கொண்டாடி வரும் நிலையில் தளபதி விஜய் தனது நண்பர்கள் உடன் இணைந்து வீடியோ காலில் பேசி மகிழ்ந்துள்ளார்.
Recommended Video
விஜய்யுடன் சிறுவயது முதலே ஒன்றாக வளர்ந்து வரும் இவர்கள் எப்போதுமே ஒரு கேங்காகவே இன்றுவரை சுற்றி வருகின்றனர்.
இவ்வாறு நட்புக்கு இலக்கணமாக விளங்கி வரும் இந்த நண்பர்கள் கூட்டணி, நண்பர்கள் தினத்தன்று ஒன்றாக வீடியோ காலில் பேசி மகிழ்ந்துள்ள நிலையில், அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வேன் மீது ஏறி
சமீபத்தில் மாஸ்டர் படப்பிடிப்பில் விஜய்
வேன் மீது ஏறி தன்னுடைய ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட மெகா புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களை தெறிக்க விட்டு வைரலாகி வந்த நிலையில், மாஸ்டர் படத்திற்கான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் கூடி வருகிறது.

நீண்டகால நிஜ நண்பர்கள்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்சேதுபதி, சாந்தனு பாக்யராஜ், மாளவிகா மோகனன் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் நடித்திருக்க, ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக விஜய்யின் நீண்டகால நிஜ நண்பர்களும் திரைப் பிரபலங்களுமான ஒரு சில முக்கியமான நடிகர்களும் இந்தப்படத்தில் நடித்திருப்பது அனைவரின் மத்தியிலும் கூடுதல் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

நண்பர்களுடன் இருக்கும் நேரங்களில்
திரைப்படங்களில் மட்டுமே மாஸ் காட்சிகளிலும், காமெடி காட்சிகளிலும் கலக்கி வரும் விஜய், வீட்டில் எப்பொழுதும் அமைதியாக இருப்பார் அதேபோன்று படப்பிடிப்பு தளங்களிலும் தன்னுடைய காட்சியை நடித்துவிட்டு மற்ற நேரத்தில் மிகவும் அமைதியாக இருப்பார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயமே, இருப்பினும் விஜய் தன்னுடைய நண்பர்களுடன் இருக்கும் நேரங்களில் மட்டும் கலகலப்பாக பேசி சிரிக்கும் சிரிப்பு சத்தம் பயங்கரமாக கேட்கும் என விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் பல இடங்களில் கூறியுள்ளார்.

நண்பர்களுடன் வீடியோ கால்
இவ்வாறு நண்பர்களிடம் மட்டுமே தன்னுடைய சேட்டையை காட்டும் தளபதி விஜய், ஃப்ரெண்ட்ஷிப் டேவை முன்னிட்டு தன்னுடைய நெருங்கிய நண்பர்களுடன் வீடியோ காலில் பேசி மகிழ்ந்துள்ளார். உலகெங்கிலும் நண்பர்கள் தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பலரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர், இந்நிலையில் விஜய்யின் ஃப்ரெண்ட்ஷிப் டே வீடியோ சாட் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃப்ரெண்ட்ஷிப் டேவை கொண்டாடி
கொரானா நோய்த் தொற்று பரவல் காரணமாக பலரும் வெளியில் செல்ல இயலாத நிலை ஏற்பட்டிருக்கும் நிலையில், பெரும்பாலோனோர் நண்பர்கள் தினத்தை சமூக வலைதளங்கள் வாயிலாக கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் நடிகர் விஜய் தன்னுடைய பால்ய கால நண்பர்களான சஞ்சீவ், ஸ்ரீநாத், ராம்குமார், மனோஜ் உள்ளிட்ட பல நெருங்கிய நண்பர்களுடன் ஃப்ரெண்ட்ஷிப் டேவை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக வீடியோ கால் வாயிலாக நண்பர்கள் தின வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.

இணையதளத்தில் வைரலாகி
இவ்வாறு நண்பர்களுடன் இணைந்து வீடியோ காலில் ஃப்ரெண்ட்ஷிப் டேவை கொண்டாடி மகிழ்ந்த தளபதி விஜய்யின் இந்த ஃப்ரெண்ட்ஷிப் டே வீடியோ கால் சாட் புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











