OTTயில் வெளியாக தயாரானது விஜய் திரைப்படம்.. தளபதி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி !

சென்னை: உலகமே விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் பொழுது தற்போது விஜய்யின் மற்றொரு திரைப்படம் OTT தளத்தில் வெளியாக உள்ளது.

Recommended Video

V-CONNECT | ACTOR MATHI ALAGAN | 30 வருஷ நடிகன்- விஜய் டிவி முதல் பென்குயின் வரை | FILMIBEAT TAMIL

பல ஆண்டுகளாக வெளியிடப்படாமல் இருந்த விஜய்யின் திரைப்படம் தற்போது வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

இதைக் கேள்விப்பட்ட விஜய்யின் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஷாக்காகி உள்ளனர்.

வேற்றுமொழி ரசிகர்களிடம்

வேற்றுமொழி ரசிகர்களிடம்

தென்னிந்திய மொழிகளில் தமிழ் திரைப்படங்களுக்கு என ஒரு மிகப்பெரிய வரவேற்பு அன்று முதல் இன்று வரை இருந்து வருகிறது. அவ்வாறு இன்றும் தமிழில் உருவாகிய பல திரைப்படங்கள் வெற்றி பெற்று பல படங்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டும் சில படங்கள் மொழிமாற்றம் செய்யப்படாமலேயே அப்படியே வெளியாகி வேற்றுமொழி ரசிகர்களிடமும் மிகப்பெரிய வசூல் சாதனை செய்து வருகிறது.

வெறித்தனமான ரசிகர்கள்

வெறித்தனமான ரசிகர்கள்

அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வரும் தளபதி விஜய்க்கு தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் பல வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர். அந்தவகையில் தமிழ்நாட்டில் வெளியாகும் விஜய் படங்கள் எவ்வாறு இங்கு கொண்டாடப்படுகிறதோ அதேபோன்று மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழிகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ்

இந்த நிலையில் விஜய்-அட்லியுடன் மூன்றாவது முறையாக இணைந்து பெண்கள் கால்பந்து ஆட்டத்தை மையமாகக் கொண்டு வெளியான பிகில் திரைப்படம் சென்ற ஆண்டு வெளியாகி சக்கைபோடு போட்டு வசூல் சாதனை செய்து வந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைவதாக சொல்லப்பட்டிருந்த திரைப்படம் தற்போது மாஸ்டர் என்ற பெயரில் உருவாகி அனைவரின் எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ளது.

ஒன்றாக இணையும்

ஒன்றாக இணையும்

முதல் முறையாக விஜய் மற்றும் விஜய்சேதுபதி என இரண்டு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் ஒன்றாக இணையும் இந்த படத்தில் பல பிரபலமான நடிகர்களும் இணைந்துள்ளனர். மாஸ்டர் படத்துக்கான அப்டேட் அவ்வப்போது வந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் நிலையில் இன்று வரை டீசர் மற்றும் டிரைலர் என எதுவுமே வெளியிடப்படாமல் படக்குழு சஸ்பென்ஸாக வைத்துள்ளது.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி மாஸ்டர் திரைப்படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் துளிக்கூட நல்லவன் கிடையாது மிகவும் கொடூரமான வில்லனாக இந்த படத்தில் நடித்துள்ளேன் என தனது கதாபாத்திரத்தை பற்றி சமீபத்தில் கூறியிருந்த நிலையில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் கூடியுள்ளது.

திரையரங்குகளில் வெளியாகி

திரையரங்குகளில் வெளியாகி

அதேபோல் விஜய் நடிக்கும் படங்கள் ஒவ்வொன்றும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு அங்கும் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனையை செய்து வருகிறது. இந்தநிலையில் 2014ஆம் ஆண்டு பொங்கல் அன்று விஜய் மற்றும் மோகன்லால் இணைந்து நடித்த ஜில்லா திரைப்படம் வெளியாகி சக்கைபோடு போட்டு மிகப்பெரிய வெற்றியடைந்தது.

ஆறு ஆண்டுகளாக

ஆறு ஆண்டுகளாக

அவ்வாறு மிகப்பெரிய வெற்றியடைந்த ஜில்லா திரைப்படம் தெலுங்கு உரிமம் பெற்றும் கடந்த ஆறு ஆண்டுகளாக வெளியிடப்படாமல் இருந்து வந்த நிலையில் தற்போது வெளியிட தயாரிப்பாளர் ஆர்.பி சௌத்ரி முடிவெடுத்துள்ளார்.

தள்ளிப்போன ஜில்லா

தள்ளிப்போன ஜில்லா

ஜில்லா படம் வெளியானபோது தெலுங்கில் அவ்வளவாக ரசிகர்கள் கூட்டம் இல்லாத விஜய்க்கு, சமீபத்தில் பல படங்கள் அங்கு வெளியாகி சக்கை போடு போட்டு விஜய்க்கு தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருவதால் தெலுங்கில் வெளியிடப்படாமல் தள்ளிப்போன ஜில்லா படம் இப்போது வெளியாக உள்ளது.

தெலுங்கு ரசிகர்களுக்காக

தெலுங்கு ரசிகர்களுக்காக

தெலுங்கு ரசிகர்களுக்காக அங்கு காமெடியில் கொடிகட்டி பறக்கும் பிரம்மானந்தாவை வைத்து சில காட்சிகள் ஜில்லா படத்தில் எடுக்கப்பட்டு தமிழில் அந்த காட்சிகள் சேர்க்காமல் நீக்கப்பட்டிருந்தது. எனவே தற்போது தெலுங்கில் வெளியாவதால் மீண்டும் நீக்கப்பட்ட காட்சிகள் இணைக்கப்பட்டு தெலுங்கு ரசிகர்களுக்காகவே எக்ஸ்குளூசிவ் ஆக OTT தளத்தில் வெளியாக உள்ளது. இதனைக் கேள்விப்பட்ட தெலுங்கு தளபதி ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் துள்ளிக் குதித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X