twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வசூல் ரெய்டு ஆரம்பம்.. இரண்டு நாட்களில் தளபதி விஜய்யின் மாஸ்டர் பட வசூல் எவ்வளவு தெரியுமா?

    |

    சென்னை: போகியன்று வெளியான மாஸ்டர் திரைப்படம் கடந்த இரு நாட்களில் வேற லெவல் வசூல் வேட்டை நடத்தி உள்ளது.

    50 சதவீத இருக்கைகளுடன் வெளீயான மாஸ்டர் திரைப்படம் யாருமே எதிர்பார்க்காத வசூல் வேட்டையை இரண்டே நாட்களில் சும்மா ரவுண்டு கட்டி நடத்தி உள்ளது.

    தியேட்டர் ஓனர்கள், விநியோகஸ்தர்கள் என எல்லாருக்குமே மாஸ்டர் படம் லாபத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மொட்டை பாஸ் இஸ் பேக்.. பாலாவை கதற விட்ட ஷிவானி.. ஆறுதல் சொல்லும் சுரேஷ்.. அனல் பறக்கும் 3வது புரமோ!மொட்டை பாஸ் இஸ் பேக்.. பாலாவை கதற விட்ட ஷிவானி.. ஆறுதல் சொல்லும் சுரேஷ்.. அனல் பறக்கும் 3வது புரமோ!

    கடைசி நேர செக்

    கடைசி நேர செக்

    தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டு, பின்னர் கடைசி நேரத்தில், மத்திய அரசின் நெருக்கடி காரணமாகவும் கொரோனா விதிமுறை காரணமாகவும் 50 சதவீதம் இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. போன தீபாவளிக்கே படத்தை வெளியிடாமல் வெயிட் பண்ணதுக்கு கடைசியில் பலனே இல்லாமல் போனது.

    வசூல் மன்னன்

    வசூல் மன்னன்

    கோலிவுட் பாக்ஸ் ஆஃபிஸ் கிங்கான விஜய் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தனது மாஸ்டர் படத்தின் மூலம் வசூல் வேட்டையை மீண்டும் நிகழ்த்தி காட்டியுள்ளார். இந்த பொங்கல் விடுமுறையை பயன்படுத்திக் கொண்டு, மீண்டும் தியேட்டர் தொழிலை லாபகரமான பாதைக்கு கொண்டு செல்ல விஜய்யின் மாஸ்டர் கை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    முதல் நாள் வசூல்

    ஜனவரி 13ம் தேதி மாஸ்டர் படம் வெளியான முதல் நாளில் 25 கோடிக்கும் அதிகமான வசூல் தமிழ்நாட்டில் மட்டும் என தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. யார் என்ன வேணா சொல்லட்டும், மாஸ்டர் தி பிளாஸ்டர் என ட்வீட் போட்டு தெறிக்கவிட்டனர்.

    40 கோடி வசூல்

    40 கோடி வசூல்

    ரிலீசுக்கு முன்பே படக்காட்சிகள் லீக், கலவையான (கடுமையான) விமர்சனங்கள் என பொங்கல் தினத்தன்று மாஸ்டர் படத்தின் பொங்கல் தின வசூல் முதல் நாளை விட கணிசமாக குறைந்துள்ளது. இரண்டாவது நாளில் 15 கோடி வசூலை ஈட்டிய மாஸ்டர் திரைப்படம் ரிலீசான இரண்டே நாட்களில் 40 கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    மற்ற ஏரியாக்களில்

    மற்ற ஏரியாக்களில்

    மாஸ்டர் திரைப்படம் மற்ற ஏரியாக்களிலும் கணிசமான தொகையை வசூலாக ஈட்டியுள்ளது என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இரண்டாம் நாள் வசூல் மற்றும் வீக்கெண்ட் வசூல் என அதிகாரப்பூர்வ தகவலை விரைவில் தயாரிப்பு தரப்பே அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கொரோனா மட்டும் இல்லனா

    கொரோனா மட்டும் இல்லனா

    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் அனிருத் இசையில் வெளியாகி உள்ள மாஸ்டர் திரைப்படம் கொரோனா பரவல் காரணமாக 50 சதவீத இருக்கைகளுடன் வெளியாகி உள்ளது. கொரோனா பிரச்சனை மட்டும் இல்லைன்னா முதல் மூன்று நாட்களிலேயே 100 கோடி பாக்ஸ் ஆஃபிஸ் சாதனையை மாஸ்டர் செய்திருக்கும் என்றும் கூறுகின்றனர்.

    English summary
    Thalapathy Vijay’s Pongal release movie Master collected 40 crores in 2 days collection in Tamil Nadu alone.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X