கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!

சென்னை: கடந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி வெளியான குட்டி ஸ்டோரி பாடல் பட்டி தொட்டியெங்கும் மாஸ்டர் புகழை பரப்பியது.

இந்நிலையில், தற்போது குட்டி ஸ்டோரியின் பாடல் வீடியோ யூடியூப் தளத்தில் வெளியாகி விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு ஆசிரியராக செல்லும் ஜான் துரைராஜ் மாணவர்கள் மத்தியில் பாடி ஆடும் பாடலாக இந்த பாடல் அமைந்துள்ளது.

ஒரு வருஷம்

ஒரு வருஷம்

மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான குட்டி ஸ்டோரி பாடல் வெளியாகி கிட்டத்தட்ட ஒராண்டு ஆகப் போகிறது. இசையமைப்பாளர் அனிருத் இசையில், இயக்குநர் அருண் ராஜா காமராஜின் வித்தியாசமான வரிகளில் தளபதி விஜய்யின் க்யூட்டான வாய்ஸில் உருவான குட்டி ஸ்டோரி பாடலின் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில்

சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில்

குட்டி ஸ்டோரி பாடலின் லிரிக் வீடியோவை பார்த்த ரசிகர்கள், இந்த பாடல் கல்லூரியில் தான் இருக்கப் போகிறது என்று நினைத்தார்கள். ஆனால், அதற்கு மாறாக சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு வாத்தியாராக செல்லும் இடத்தில் விஜய் பாடி நடனமாடி அந்த மாணவர்களை ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

83 மில்லியன்

83 மில்லியன்

11 மாதங்களுக்கு முன்பு வெளியான மாஸ்டர் படத்தின் முதல் சிங்கிளான குட்டி ஸ்டோரி பாடலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உலகம் முழுவதும் உருவாகினர். ஒய் திஸ் கொலவெறி பாடலுக்கு பிறகு அனிருத் ஆங்கில லிரிக்ஸ் கொண்ட பாடலை தமிழ் சினிமாவில் போட்டுள்ளார். 83 மில்லியன் லைக்குகளை அந்த பாடல் தாண்டி, விரைவில் 100 மில்லியனை நெருங்க காத்துக் கொண்டு இருக்கிறது.

ரசிகர்கள் ஹேப்பி

ரசிகர்கள் ஹேப்பி

மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி வீடியோ பாடல் வெளியான நிலையில், தளபதி விஜய்யின் நடனத்தையும், குட்டி ஸ்டோரி வீடியோ பாடலையும் கண்டு ரசிக்கும் வாய்ப்பு கிடைத்ததை அறிந்த ரசிகர்கள் ரொம்பவே ஹேப்பி ஆகி உள்ளனர். #KuttiStoryVideoSong என்ற ஹாஷ்டேக்கையும் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ஒடிடி ரிலீஸ்

ஒடிடி ரிலீஸ்

தியேட்டர்களில் 200 கோடி வசூலை தாண்டி வெற்றிகரமாக ஓடி வரும் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் அடுத்த மாதம் பிப்ரவரி 12ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இது தொடர்பாக அமேசான் பிரைம் இந்தியா இன்னமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X