மாஸ்டர் தெலுங்கு டீசர் ரிலீஸ்.. பான் இந்தியா படமாக பட்டையை கிளப்பப் போவது எப்போது? மரண வெயிட்டிங்!

சென்னை: மாஸ்டர் படத்தின் தெலுங்கு டீசர் தற்போது வெளியாகி யூடியூப் தளத்தை தெறிக்கவிட்டு வருகிறது.

தளபதி விஜய்யின் பட டீசர் மற்றும் டிரெய்லர் வெளியானாலே அதனை விஜய் ரசிகர்கள் டிரெண்டாக்கி விடுவர்.

தமிழில் மட்டுமின்றி இந்த முறை மாஸ்டர் படத்தை தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என பான் இந்திய மொழி படமாக ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

மாஸ்டர் தெலுங்கு டீசர்

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் படத்தின் தெலுங்கு டீசர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. தெலுங்கிலும் தளபதியின் குரல் ஒலிப்பதை கண்டு விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதே காட்சிகள்

அதே காட்சிகள்

தமிழ் டீசரில் காட்டப்படாத காட்சிகள் தெலுங்கு டீசரில் இடம்பெறுமா? என எதிர்பார்த்த தளபதி ரசிகர்களுக்கு சற்றே ஏமாற்றம் தான் என்றாலும், நேரடி டோலிவுட் பட டீசருக்கு டஃப் கொடுக்கும் வகையில் தெலுங்கு மொழியிலும் மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் மிரட்டுவதை கண்டு பிரம்மித்துப் போயுள்ளனர்.

பான் இந்தியா மாஸ்டர்

பான் இந்தியா மாஸ்டர்

பிகில் திரைப்படத்தையே இயக்குநர் அட்லி பான் இந்திய படமாக வெளியிட திட்டமிட்டு இருந்தார். ஆனால், டப்பிங் பணிகளை செய்ய நேரம் இல்லாததால், கடந்த ஆண்டு தீபாவளிக்கு பிகில் திரைப்படத்தை பான் இந்திய படமாக ரிலீஸ் செய்ய முடியவில்லை. கொரோனா காரணமாக மாஸ்டர் ரிலீஸ் தள்ளிப் போன நிலையில், இந்திய மொழிகளில் பான் இந்திய படமாக மாஸ்டர் வெளியாக உள்ளது.

எப்போ ரிலீஸ்

எப்போ ரிலீஸ்

பொங்கல் ரிலீசாக மாஸ்டர் திரைப்படம் வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இன்னமும் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாஸ்டர் படக்குழு வெளியிடவில்லை. தற்போது வெளியான தெலுங்கு டீசரில் கூட ரிலீஸ் தேதி குறிப்பிடப்படவில்லை. பொங்கலுக்கு வெளியாகுமா? தள்ளிப் போகுமா? என்ற அச்சமும் எழுந்துள்ளது.

மரண வெயிட்டிங்

மரண வெயிட்டிங்

தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கிடைப்பதற்காக கொஞ்ச காலம் வெயிட் பண்ண மாஸ்டர் படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. மாஸ்டர் படத்தை வரும் பொங்கலுக்கு தியேட்டர்களில் பார்க்க தளபதி ரசிகர்கள் மரண வெயிட்டிங் செய்து வருகின்றனர். பார்த்து பண்ணுங்க சாரே!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X