விஜய்யா இது....சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் பள்ளி பருவ ஃபோட்டோ
சென்னை : மாஸ்டர் படம் பிரம்மாண்ட வெற்றி அடைந்ததால், 2021 ஐ வெற்றியுடன் துவக்கி உள்ளார் விஜய். கொரோனா பரவலால் தியேட்டர்களில் 50 சதவீதம் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையிலேயே ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைத்து, வெற்றி பெற்ற படம் மாஸ்டர்.
இதைத் தொடர்ந்து பல படங்களில் அடுத்தடுத்து கமிட் ஆகி படு பிசியாக இருந்து வருகிறார் விஜய். இந்நிலையில் விஜய்யின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ஸ்ரீநாத், இதுவரை யாரும் பார்க்காத விஜய்யின் பள்ளி பருவ ஃபோட்டோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த ஃபோட்டோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

அந்த சிறு வயதிலும் மிக அமைதியான முகத்துடன் நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட குரூப் ஃபோட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பெண் குழந்தைகளுக்கு நடுவில் இருந்தாலும் கேமிராவிற்கு போஸ் கொடுப்பதில் கவனமாக இருக்கும் விஜய்யின் குழந்தை உருவத்தை பலரும் புகழ்ந்து வருகின்றனர்.
விஜய்யின் அடுத்த படமான தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தான் அமெரிக்காவின் ஜார்ஜியாவில் நிறைவடைந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்கப்படும் என கூறப்படுகிறது. இதற்காக சென்னையில் பிரம்மாண்ட ஷாப்பிங் மால் போன்று செட் அமைக்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











