விஜய்யின் புதிய படம்...கார்த்தியின் இந்த ஹிட் பட டைரக்டர் தான் இயக்குகிறார்

சென்னை : லோக்கேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் - விஜய் சேதுபதி இணைந்து நடித்த மாஸ்டர் படம், ஜனவரியில் ரிலீசாகி பிளாக்பஸ்டர் படமாகி உள்ளது. இதைத் தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கும் தளபதி 65 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை சமீபத்தில் தான் முடித்தார் விஜய்.

அமெரிக்காவின் ஜார்ஜியாவில் படப்பிடிப்பை முடித்து விட்டு, சில நாட்களுக்கு முன்பு தான் சென்னை திரும்பினார் விஜய். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்த படத்தை முடிப்பதற்குள்ளாகவே அடுத்ததாக 3 முதல் 4 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் விஜய்.

விஜய்க்காக காத்திருக்கும் படங்கள்

விஜய்க்காக காத்திருக்கும் படங்கள்

கொரோனா பரவல் காரணமாக சினிமா உலகமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் விஜய்க்கு அடுத்தடுத்த படங்கள் வரிசை கட்டி காத்திருக்கின்றன. மாஸ்டர் படத்திற்கு பிறகு தியேட்டரில் வேறு எந்த படமும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஓடாததால் தான், டைரக்டர்கள் பலரும் விஜய்க்காக கதை ரெடி செய்து வருகிறார்கள்.

மாஸ் ஹீரோக்களை சுற்றும் டைரக்டர்கள்

மாஸ் ஹீரோக்களை சுற்றும் டைரக்டர்கள்

மாஸ் ஹீரோக்கள் படம் என்றால் மட்டும் தான் தியேட்டருக்கு வரும் மனநிலைக்கு ரசிகர்கள் வந்து விட்டதால், பெரிய ஹீரோக்களையே டைரக்டர்கள் பலரும் குறிவைக்கின்றனர். இதற்கிடையில் நம்பத்தகுந்த வட்டார தகவல்களின் அடிப்படையில், தெலுங்கின் டாப் டைரக்டரான வம்சி பைதிபல்லியிடம் விஜய் கதை கேட்டு வருகிறாராம்.

விஜய்யை இயக்க தயாராகும் வம்சி

விஜய்யை இயக்க தயாராகும் வம்சி

இந்த கதை விஜய்க்கு மிகவும் பிடித்து விட்டதால், விரைவில் விஜய் - வம்சி இணையும் படம் உறுதி செய்யப்பட உள்ளதாம். தில் ராஜு தான், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் இந்த படத்தை தயாரிக்க போகிறாராம். வம்சி சமீபத்தில் மகேஷ்பாவை வைத்து இயக்கிய மகரிஷி படம் சூப்பர்ஹிட் படமாக மட்டுமின்றி, தேசிய விருதை பெற்ற படமாகவும் ஆனது.

கார்த்தியை இயக்கிய வம்சி

கார்த்தியை இயக்கிய வம்சி

வம்சி, தமிழ் சினிமாவிற்கும் புதியவர் இல்லை. இவர் ஏற்கனவே கார்த்தி, தமன்னா, நாகர்ஜுனா நடித்த தோழா படத்தை இயக்கி வெற்றி கண்டவர். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளிவந்த இந்த படம் பிளாக்பஸ்டர் படமாக ஓடியது. இரண்டு ஹீரோக்களின் ரசிகர்களையும் திருப்தி செய்யும் அளவிற்கு இந்த படம் அமைந்து, மறக்க முடியாத படமாகி விட்டது.

தளபதி 66 ஆ?தளபதி 67 ஆ?

தளபதி 66 ஆ?தளபதி 67 ஆ?

விஜய் - வம்சி இணையும் படம் தளபதி 66 அல்லது தளபதி 67 ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இவர்கள் இணைவது உறுதியான தகவல் என கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X