உட்கார்ந்து யோசிப்பாங்களோ...பப்ளிக்கில் விஜய் செய்த குசும்பு...திடீரென வைரலாகும் வீடியோ

சென்னை : பொதுவாக நடிகர் விஜய் யாரிடமும் அதிகம் பேச மாட்டார். சீரியசான மனிதர் என்ற கருத்து தான் நிலவுகிறது. ஆனால் அவருடன் பணியாற்றிய அனைவரும் விஜய் மிகவும் கலகலப்பானவர், அனைவருடனும் வம்பு செய்து விளையாட கூடியவர் என கூறுகின்றனர்.

Thalapathy Vijays surprise prank video sets internet on fire

இந்நிலையில் பொதுமக்களிடம் விஜய் குசும்பு செய்த வீடியோ ஒன்று திடீரென வைரலாக்கப்பட்டு வருகிறது. சில வருடங்களுக்கு முன் ஹெல்மெட்டால் முகத்தை மறைத்தபடி, பைக்கில் சென்ற விஜய், அந்த வழியாக சென்ற சிலரிடம் முகவரியை விசாரித்துள்ளார்.

கஸ்தூரி பாய் நகரில் உள்ள தனது வீட்டின் முகவரியையே விஜய் விசாரித்துள்ளார். சாலையோரத்தில் கடை வைத்திருந்த ஒருவரிடம் முகவரியை விசாரித்து விட்டு, நடிகர் விஜய் வீடு அங்கு தான் உள்ளதா எனவும் கேட்டார். ஆனால் தங்களிடம் பேசுவது விஜய் என தெரியாமல் அவர்களும் பேசினர்.இந்த ஒட்டுமொத்த நிகழ்வையும் ஒருவர் மொபைலில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ இப்போது ட்விட்டரில் பதிவிடப்பட்டு, வைரலாக்கப்பட்டு வருகிறது. நடிகர்களின் பழைய போட்டோக்களை தான் இதுவரை வைரலாக்கி வந்தனர். தற்போது பழைய வீடியோக்களையும் ரசிகர்கள் வைரலாக்க துவங்கி விட்டனர்.

விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் தளபதி 65 படத்தின் சூட்டிங்கிற்காக தயாராகி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X