இன்னமுமா...வைரலாகும் விஜய்யின் மாஸ்டர் அன்சீன் ஃபோட்டோஸ்

சென்னை : விஜய் என்ன செய்தாலும் அதை கொண்டாடி, வைரலாக்கி வருகின்றனர் அவரது ரசிகர்கள். சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி 65 படத்தின் டைட்டில் மற்றும் ஃபஸ்ட், இரண்டாவது லுக்கள் வெளியிடப்பட்டன.

பீஸ்ட் என பெயரிடப்பட்ட படத்தின் டைட்டில், போஸ்டர்களை விஜய் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் தாறுமாறாக வைரலாக்கி, அவை இந்திய அளவில் சாதனை படைக்கும் அளவிற்கு செய்து விட்டனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் மீண்டும் நடக்க உள்ளது.

சாதனையை துவக்கிய பீஸ்ட்

சாதனையை துவக்கிய பீஸ்ட்

நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடிக்கிறார்கள். படம் ரிலீசாவதற்கு முன்பே இந்த படம் சாதனை கணக்கை துவக்கி உள்ளதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

வசூலை குவித்த மாஸ்டர்

வசூலை குவித்த மாஸ்டர்

இதற்கு முன் விஜய் நடித்த மாஸ்டர் படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிடப்பட்டது. இந்த படம் பாக்ஸ் ஆபீசில் மிகப் பெரிய அளவில் வசூலை வாரி குவித்தது. லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை எழுதி, இயக்கி இருந்தார். விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், அர்ஜுன் தாஸ், ஆன்டிரியா, சாந்தனு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

வைரலாகும் அன்சீன் ஸ்டில்ஸ்

வைரலாகும் அன்சீன் ஸ்டில்ஸ்

மாஸ்டர் படத்தின் பாடல், படம் என பலவும் உலக அளவில் ஹிட் ஆகி விட்ட நிலையில், தற்போது இந்த படத்தின் அன்சீன் ஸ்டில்கள் சில சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதுவும் விஜய்யின் அன்சீன் ஃபோட்டோக்கள் தான் அதிகம் பகிரப்படுகிறது.

டிரெண்டிங்கில் வாத்தி கம்மிங்

டிரெண்டிங்கில் வாத்தி கம்மிங்

மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் படப்பிடிப்பிற்காக விஜய் தயாராவது, சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்ட போது எடுக்கப்பட்டது என சில ஃபோட்டோக்கள் வைரலாகி வருகின்றன. நடிகர் விஜய் டீம் என்ற பக்கத்தில் இந்த ஃபோட்டோக்கள் பகிரப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வாத்தி கம்மிங் என்ற ஹேஷ்டாக்கும் ட்விட்டரில் டிரெண்டிங் ஆக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X