Don't Miss!
- Sports
மகளிர் U-19 உலககோப்பை டி20 கிரிக்கெட்.. இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.. புதிய சாதனை
- News
மதுரை பெரியார் நிலையம் வேண்டாம்.. மீனாட்சியம்மன் பேருந்து நிலையம் என மாற்றவேண்டும் : பாஜக தீர்மானம்!
- Finance
ஒரே வாரத்தில் ரூ.2.16 லட்சம் கோடி காலி.. ரிலையன்ஸ், எஸ்பிஐ டாப் லூசர்.. லிஸ்டில் யாரெல்லாம்?
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
“வாரிசு“ இசைவெளியீட்டு விழா…டிக்கெட் விலையை கேட்டு ஷாக்கான ரசிகர்கள் !
சென்னை : வாரிசு திரைப்படத்தின் இசைவெளியீட்டுக்கான டிக்கெட் பரபரப்பாக விற்றுவரும் நேரத்தில், ஒரு டிக்கெட் 4000 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
வாரிசு திரைப்படம் ரசிகர்களிடம் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது.
குடும்ப செண்டிமென்ட் கதை அம்சத்தைக்கொண்ட இப்படத்தில், பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.
வேறலெவல் மாஸா இருக்கப் போகுது.. வாரிசு இசை வெளியீட்டு விழாவில் அந்த பிரபல நடிகர் பங்கேற்பா?

வாரிசு
கோலமாவு கோகிலா, டாக்டர் திரைப்படத்தின் மகத்தான வெற்றிக்குப்பிறகு பீஸ்ட் திரைப்படம் வெளியானதால், பீஸ்ட் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், நெல்சனின் காமெடி வித்தை பீஸ்ட் படத்திற்கு ஏனோ ஒர்க் அவுட் ஆகாமல் போனது. படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும், இணையத்தில் கடுமையான கிண்டலுக்குள்ளானது.

வாரிசு
பீஸ்ட் படத்திற்கு கிடைத்த மோசமான விமர்சனத்தை ஆடுத்து, வாரிசு படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள். இப்படத்தை தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். விஜய்யின் தீவிர ரசிகையான ராஷ்மிகா மந்தனாவே அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

இசை வெளியீட்டு விழா
இசைவெளியீட்டு விழா டிசம்பர் 24ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. விஜய் பேச்சை கேட்க ரசிகர்கள் இப்போதே தயாராகி விட்டனர். மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி ரசிகர்கள் இடையே மிகப்பெரிய அளவில் டிரெண்டானது. இந்த இசைவெளியிட்டு விழாவில் விஜய் என் பேச போகிறார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

அதிர்ச்சியில் ரசிகர்கள்
இந்நிலையில், வாரிசு திரைப்படத்தின் இசைவெளியீட்டுக்கான டிக்கெட் பரபரப்பாக விற்றுவரும் நேரத்தில், ஒரு டிக்கெட் 4000 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலால் விஜய்யின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இணையத்தில் வெளியாகி உள்ள இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.