Don't Miss!
- Lifestyle
சப்பாத்தி, பூரிக்கு சூப்பராக இருக்கும்... ஆலு பட்டர் மசாலா
- News
"காவி".. நள்ளிரவு 2 மணிக்கு "அவருக்கு" போனை போட்ட ஷாருக்கான்.. மேட்டரை உடைத்த சி.எம்.. ஒரேநாளில் பரபர
- Sports
ஒரே போட்டியில் பல மாற்றங்கள்.. நியூசி, உடனான 3வது ODI போட்டி..ப்ளேயிங் 11ல் ரோகித் சர்மா பலே திட்டம்
- Technology
விபூதி அடிக்கும் BharOS என்கிற "பாரத்" ஓஎஸ்? இந்த உண்மை தெரிஞ்சா.. கழுவி கழுவி ஊத்துவீங்க!
- Automobiles
இந்த காருக்கு வெயில்தான் எரிபொருள்.. கரண்ட், பெட்ரோல், டீசல்னு எதுமே தேவையில்ல! காச சூப்பரா மிச்சப்படுத்தலாம்!
- Finance
மீண்டும் இந்தியா.. டெஸ்லா-வுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் 3 மாநிலங்கள்..!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
ரூ. 250 கோடியை தட்டித்தூக்கிய வாரிசு.. அதிகாரப்பூர்வ வசூல் விவரம்.. மகிழ்ச்சியில் பேன்ஸ்!
சென்னை : வாரிசு படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் 11வது நாள் வசூல் விவரத்தை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு படம் ஜனவரி 11ந் தேதி தியேட்டரில் வெளியானது.
விஜய்யின் தீவிர ரசிகையான ராஷ்மிகா மந்தனா இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். சரத்குமார், பிரபு, யோகிபாபு, ஷ்யாம், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், குஷ்பு, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
Varisu vs Thunivu: 2வது வாரத்திலும் துணிவு படத்தை பின்னுக்குத் தள்ளிய வாரிசு.. வசூல் விவரம் இதோ!

வாரிசு
நடிகர் விஜய் பல ஆண்டுகளுக்கு பிறுகு பேமிலி செண்டிமென்ட் கதையில் நடித்துள்ளார். குடும்ப உறவுகளுக்கு இடையே நடக்கும் மனக்கசப்பு குறித்தும், சிக்கல்கள் குறித்தும் வாரிசு படத்தில் அழகாக காட்டப்பட்டுள்ளது. இப்படத்தில் அப்பாவாக சரத்குமாரும், அம்மாவாக ஜெயசுதாவும் நடித்துள்ளனர். ஷியாம் அண்ணனாக நடித்துள்ளார். இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். இப்படத்தை தில் ராஜு தயாரித்திருக்கிறார்.

நல்ல வசூல்
வாரிசு படத்தின் பாடல்கள் ஹிட்டடித்த அளவுக்கு ரசிகர்கள் படத்தை கொண்டாடவில்லை. யோகி பாபு உடனான காமெடிக்கும், சில செண்டிமென்ட் காட்சியும் சிறப்பாக இருந்ததாக ரசிகர்கள் கூறினார்கள். ஆனால், ஒரு சில ரசிகர்கள் இந்தி சீரியல் போல இருப்பதாக கிண்டலடித்து வருகின்றனர். இப்படம் விமர்சன ரீதியில் வரவேற்பு இல்லை என்றாலும், வசூலில் ஓரளவு நல்ல வருவாயை ஈட்டி வருவதாக தெரிகிறது.

ரூ 250 கோடியை தட்டித்தூக்கிய வாரிசு
வாரிசு படத்தின் 7வது நாளில் ரூ.210 கோடி வசூலித்துள்ளதாக தமிழக விநியோகஸ்தர் லலித் தெரிவித்து இருந்தார். தற்போது, பொங்கல் விடுமுறை மற்றும் வார நாட்களும் முடிவடைந்துள்ளதால், வாரிசு படத்தின் 11 நாட்கள் நிறைவடைந்த நிலையில், உலகம் முழுக்க ரூ.250 கோடிக்கும் மேல் வசூலித்திருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தகவலால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து வருகின்றனர்.

சக்சஸ் மீட்
முன்னதாக வாரிசு திரைப்படத்தின் வெற்றியை நடிகர் விஜய், படக்குழுவினருடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார். ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த சக்சஸ் பார்ட்டியில், நடிகர் விஜய், இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு, இசையமைப்பாளர் தமன், பாடலாசிரியர் விவேக், நடிகர் ஷியாம் ஆகியோர் கலந்துகொண்டனர்.