Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
“விஜய்யே வேண்டாம்“ புலம்பிய ரசிகர்கள்..சமாதானப்படுத்திய விஜய்.. இதுதான் நடந்தது!
சென்னை : வாரிசு படப்பிடிப்பின்போது போலீசார் தாக்கியதால் விஜய் மீது கோபத்தில் இருந்த ரசிகர்களை விஜய் கூலாக சமாதானப்படுத்தி உள்ளார்.
நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கிக் கொண்டிருக்கும் வாரிசு படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். தில் ராஜு தயாரித்து வரும் இப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வருகிறது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், சங்கீதா போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் லீட் ரோலில் நடித்து வருகின்றனர்.
தளபதி
67
படத்தில்
விஜய்க்கு
வில்லனாகிறாரா
பாலிவுட்
இயக்குநர்?:
லோகேஷ்
என்ன
சொல்லப்
போறார்

லீக்கான வீடியோ
மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து வாரிசு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து லீக்காகி வந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த இயக்குநர் படப்பிடிப்பு தளத்தில் யாரும் மொபைல் ஃபோனை பயன்படுத்தக்கூடாது என கண்டிஷன் போட்டார்.

குடும்ப கதை
வாரிசு திரைப்படம் 2023 பொங்கலுக்கு திரைக்கு வரும் என்றும் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இப்படம் குடும்பத்தை மையப்படுத்திய கதை என்றும், முழுக்க முழுக்க ஆக்ஷன், மாஸ் மற்றும் நல்ல பாடல்கள் அடங்கிய ஃபீல் குட் குடும்ப பொழுதுபோக்கு படமாக இப்படம் என்றும் கூறப்படுகிறது.

போலீஸ் தடியடி
வாரிசு படத்தின் படப்பிடிப்பு சென்னை எண்ணூரில் பிரம்மாண்ட செட்டில் நடைபெற்று வருகிறது. அந்த தகவலை தெரிந்து கொண்ட ரசிகர்கள் விஜய்யை பார்க்க ஏராளமானோர் அப்பகுதியில் திரண்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

விஜய்யே வேண்டாம்
இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள், நாங்கள் விஜயை பார்க்க நீண்ட தூரத்தில் இருந்து காத்து இருக்கிறோம் அவர் தூரத்தில் இருந்தாவது கையை அசைத்து இருக்கலாம் என்றும், எங்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத விஜய்யை இனிமேல் நாங்கள் பார்க்க சொல்ல மாட்டோம். தளபதி எங்களுக்கு நல்ல பரிசு கொடுத்து விட்டார் என இணையத்தில் புலம்பிவந்தனர்.

சமாதானப்படுத்தினார்
இந்நிலையில், வாரிசு படப்பிடிப்புதளத்திலிருந்து தற்போது மற்றொரு வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் விஜய் மிகவும் தெளிவாக தெரிகிறார். அவர் ரசிகர்களை பார்த்து சிரித்தபடி, கை அசைத்து விட்டு செல்கிறார். நேற்று முன் தினம் விஜய்யை பார்க்க வந்த ரசிகர்கள் மீது தடியடி நடித்தப்பட்டு, ரசிகர்கள் இனி விஜய் வேண்டாம் என் கூறிவந்த நிலையில், கையை அசைத்து ரசிகர்களை எப்படியோ சமாதானப்படுத்தி விட்டார் விஜய்.