Leo Vijay Speech: இந்த உடம்பு தோலை உங்களுக்கு செருப்பா தச்சு போட்டாக் கூட பத்தாது.. விஜய் உருக்கம்!
சென்னை: லியோ வெற்றி விழாவில் இறுதியாக மேடை ஏறிய நடிகர் விஜய் "என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா.. நண்பிகள்.. உண்மைய சொல்லணும்னா நீங்க தான் என்னை உங்க நெஞ்சுல குடி வச்சிருக்கீங்க.. நான் குடியிருக்கும் கோயில் நீங்க எல்லாம்" என ஆரம்பித்து விஜய் ரசிகர்களை உருக வைத்துள்ளார்.
லலித் குமார் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், திரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தின் இந்த ஆண்டின் இன்னொரு இண்டஸ்ட்ரி படமாக மாறி உள்ளது.

ஏற்கனவே பொங்கலுக்கு வாரிசு படத்தைக் கொடுத்து 300 கோடி வசூல் செய்த விஜய் லியோ மூலமாக 600 கோடி வசூலை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறார்.
ரஞ்சிதமே ஸ்டைல் கிஸ்: நடிகர் விஜய் மேடை ஏறியதும் ரஞ்சிதமே ஸ்டைல் முத்தங்களை காற்றில் ரசிகர்களுக்கு பறக்கவிட்டார். பின்னர் நான் ரெடி தான் பாடலை பாடி சில ஸ்டெப்புகளை போட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

செருப்பா தச்சு போட்டாக்கூட பத்தாது: மேலும், "என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா.. நண்பிகள்.. உண்மைய சொல்லணும்னா நீங்க தான் என்னை உங்க நெஞ்சுல குடி வச்சிருக்கீங்க.. நான் குடியிருக்கும் கோயில் நீங்க எல்லாம் இது கொஞ்சம் சினிமா டயலாக் மாறி தெரியலாம் ஆனால், நீங்க எனக்கு காட்டுற அன்புக்கு, என் உடம்ப செருப்பா தச்சு உங்களுக்கு போட்டாக் கூட பத்தாது.. நீங்க எல்லாம் பிளடி ஸ்வீட்" என பேசி அரங்கத்தை அதிர வைத்துள்ளார்.
தெறிக்கும் டிரெண்டிங்: #ThalapathySpeech மற்றும் #LeoSuccessMeet ஹாஷ்டேக்குகள் இந்தியளவில் டிரெண்டாகி வருகின்றன. நடிகர் விஜய்யின் பேச்சு மற்றும் குட்டி ஸ்டோரியை கேட்டு ரசிகர்கள் லியோ படத்தை பார்த்ததை விட இரட்டிப்பு சந்தோஷத்தை அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











