இயக்குநர் ஆனார் விஜய்யின் மகன்.. இணையத்தில் வெளியான வீடியோ.. கொண்டாடும் தளபதி பேன்ஸ்!
சென்னை : தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் குறும்படத்தை இயக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தயாரிப்பாளர்,இயக்குநர்,எழுத்தாளர் என பன்முகத் தன்மை கொண்ட எஸ்.ஏ.சந்திரசேகர். சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்தை இயக்கி சிறந்த இயக்குநர் என பெயர் எடுத்தார்.
இவரின் மகனான தளபதி விஜய், நாளைய தீர்ப்பு படத்தில் அறிமுகமாகி பல மாஸ் ஹிட் படங்களில் நடித்து இன்று தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருக்கிறார்.

நடிகர் விஜய்
படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த விஜய் 1999ம் ஆண்டு, தனது தீவிர ரசிகையான சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு சஞ்சய் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர். மகன் சஞ்சய், விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் நான் அடிச்சா தாங்க மாட்ட பாடலில் ஆடி இருந்தார். அதே போல மகள் திவ்யா சாஷாவும் தெறி படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் நடித்திருந்தார்.
தாத்தாவைப் போலவே
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சினிமா இயக்கத்தில் ஆர்வம் செலுத்தி வருகிறார். தனது தாத்தா எஸ்ஏ சந்திரசேகர் போலவே இயக்கத்தில் ஆர்வம் கொண்ட சஞ்சய். ஆங்கிலக் குறும்படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ள வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் தாத்தாவுக்கு தப்பாத பேரன் என்று கூறி வருகின்றனர்.

வாய்ப்பை மறுத்தார்
படத்தை இயக்குவதில் ஈடுபாடு கொண்டுள்ள சஞ்சய் நிச்சயம் தமிழ் சினிமாவில் மாஸாக என்ட்ரி கொடுப்பார். சமீபத்தில் அல்போன்ஸ் புத்திரன் சஞ்சய்க்கான ஒரு கதையை தயார் செய்து வைத்திருந்தார். ஆனால், படத்தை இயக்குவதில் தான் தனக்கு ஆர்வம் இருப்பதாகவும் நடிக்க விரும்பவில்லை என கூறி, சஞ்சய் அந்த வாய்ப்பை மறுத்துள்ளார்.

தளபதி67
வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தமிழ்,தெலுங்கு என இருமொழியிலும் வாரிசு திரைப்படம் வெளியாகி நல்ல வசூலை பெற்றது. குடும்ப செண்டிமென்ட் கொண்ட இப்படத்தில், ராஷ்மிகா,சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஷியாம்,குஷ்பு ஆகியோர் நடித்துள்ளார். இப்படம் வெளியானதை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











