Vijay Son: விஜய் மகன் படத்திற்கு இசை அமைக்கும் தீ தளபதி மியூசிக் டைரக்டர்.. சீக்கிரமே ஆரம்பம்!
சென்னை: நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர். தனது சினிமா வாழ்க்கையில் இருந்து முழுவதுமாக வெளியேறி முழுநேர அரசியலில் ஈடுபடவுள்ளார். இப்படியான நிலையில், இவரது கடைசிப் படமான தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது. இந்தப் படத்திற்கு விஜய் ரூபாய் 275 கோடிகள் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகின்றது. விஜய்யின் மகன் சஞ்சய். இவர் சினிமா ஒன்றினை இயக்கப்போகின்றார் எனவும், அந்தப் படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்கின்றது எனவும் அறிவிப்புகள் ஏற்கனவே வெளியானது. இந்நிலையில் அந்தப் படத்தின் இசை அமைப்பாளர் யார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகர். இவரது மகன் விஜய். தனது மகன் விஜய்யை வைத்து பல படங்களை இயக்கியவர் எஸ்.ஏ. சந்திர சேகர். விஜய்யை திரையுலகில் அறிமுகம் செய்துவைத்தது மட்டும் இல்லாமல், அவரது படங்களுக்கு கதை கேட்பது என விஜய்யின் சினிமா கெரியரில் முக்கியப் பங்கு வகித்தவர்.

ஆனாலும் ஏஸ்.ஏ. சந்திரசேகரின் மகன் என்ற காரணத்திற்காக மட்டும், விஜய் தமிழ் சினிமாவில் உச்சநடிகராக மாறவில்லை. தனது கடின உழைப்பினால் வந்தவர். விஜய் சென்னை லயோலா கல்லூரியில் காட்சித் தொடர்பியல் துறையைத் தேர்வு செய்து படித்தார். அதாவது விஸ்காம் படித்தார். படிப்பினை முழுவதுமாக முடிக்கும் முன்னர், சினிமாவிற்குள் நுழைந்தார். தற்போது எஸ்.ஏ. சந்திரசேகர் குடும்பத்தில் இருந்து மூன்றாவது தலைமுறையாக அதாவது, விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் சினிமாவிற்குள் காலடி எடுத்துவைக்கவுள்ளார்.
ஜேசன் சஞ்சய்: ஜேசன் சஞ்சய்யைப் பொறுத்தவரையில் கனடாவில் திரைப்படக் கலையினைப் படித்தார். தனது படிப்பினை படிக்கும்போதே, படங்களுக்கான கதைகளை ஜேசன் சஞ்சய் எழுதத் தொடங்கினார். இவருக்கு படத்தில் நடிப்பதைவிடவும் இயக்குவதில்தான் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால், அப்பா போல் நடிப்பதைவிட, தாத்தாவைப்போல் இயக்க அதிக ஆர்வம் உடையவராக இருந்ததால், விஜய் குடும்பத்தினர் மறுப்பு சொல்லாமல், உறுதுணையாக நின்று வருகின்றார்கள். ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்கின்றது. லைகாவினைப் பொறுத்தவரையில், தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கும்போது, விஜய்யின் கத்தி படத்தின் மூலம் காலடி எடுத்துவைத்து பிரமாண்டமான வெற்றியுடன் அவர்களது திரை வாழ்க்கையினைத் தொடங்கினர். இப்படியான நிலையில், விஜய் மகனின் முதல் படத்தினை தயாரிக்க சென்டிமென்ட்டாகவே ஓ.கே சொல்லியுள்ளார்கள்.

கதாநாயகன்: ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் கதாநாயகனாக தொடக்கத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. அதன் பின்னர் சந்தீப் கிஷன் நடிக்கின்றார் என்ற தகவலும் உலா வருகின்றது. ஆனால் படக்குழு தரப்பில் இருந்து இது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் படத்தின் இசை அமைப்பாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இசை அமைப்பாளர்: அதாவது, ஜேசன் விஜய் இயக்கும் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசை அமைக்கின்றார் என்ற தகவல் வேகமாக உலா வருகின்றது. படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் எனக் கூறப்படுகின்றது. இப்படியான நிலையில் படத்தின் இசை அமைப்பாளர் குறித்த தகவல் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Click it and Unblock the Notifications











