முதல் படமே மாஸா இருக்கணும்.. மாஸ்டர் ப்ளான் போடும் விஜய்யின் மகன்.. அப்போ படம் தாறுமாறுதான் போல!

சென்னை: கோலிவுட்டின் மாஸ் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார். இவர் இயக்கும் படத்தை முன்னணி படத் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதற்காக ஒப்பந்தத்தில் ஜேசன் சஞ்சய் கையெழுத்திடும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. இப்படத்தின் அப்டேட்டை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் படம் குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருக்கிறார் விஜய், இவர் நடிப்பில் அண்மையில் வெளியான லியோ திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் அடித்து நொறுக்கி கல்லாக் கட்டியது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல், தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சித் தொடங்கி தீவிர அரசியலில் குதித்துள்ளார். அரசியலில் ஈடுபட்ட பிறகு முழுவதுமாக சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

Thalapathy Vijay son sanjays Master plan for direction movie

இவரின் மகன் சஞ்சய், அப்பாவை போல ஹீரோவாக வலம் வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், தனது தாத்தா எஸ்.ஏ.சந்திர சேகரைப் போல இயக்குநராக உருவாகி உள்ளார். அப்பா விஜய் போல, நடிப்பில் ஆர்வம் இல்லாத சஞ்சய், அண்மையில் 'புல் தி டிரிக்கர்' என்கிற குறும்படத்தை இயக்கியிருக்கிறார். இந்தக் குறும்படம் 'யூடியூப்' தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்: விஜய் அரசியலுக்கு சென்று இருக்கும் நிலையில், விஜய் மகன் சஞ்சய் சினிமாவில் இயக்குநராக குறித்துள்ளார். ஜேசன் சஞ்சய் இயக்கும் இந்த திரைப்படத்தில் கவின், விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் அப்படத்தின் புரோமோஷன் பணிக்காக படக்குழு அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவை அணுகியுள்ளனர். ஆரம்பத்தில் தயக்கத்துடன் இதுகுறித்து அஜித்திடம் பேசியிருக்கிறார், சுரேஷ் சந்திரா. ஆனால், அஜித்தோ அனுமதியெல்லாம் வேண்டாம் கண்டிப்பாக போய் பண்ணுங்க என்று சொன்னதாக கூறப்படுகிறது.

மாஸ்டர் பிளான்: மேலும், இந்த திரைப்படத்திற்கான பூஜை சைலண்டாக போடப்பட்டதாகவும் தகவல்கள் கசிந்துள்ள நிலையில், ஹீரோவாக விஜய்சேதுபதி, கவின், துருவ் விக்ரம் பெயர்கள் அடிப்பட்டுவந்தன.ஆனால், இந்த படத்தில் பிரபல நடிகர் துல்கர் சல்மான் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பான் இந்தியா நடிகராக வலம் வரும் துல்கர் சல்மான் தான் இந்த கதைக்கு சூட் ஆவார் என்று தெரிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் துல்கர் சல்மான், மறுபக்கம் சுரேஷ் சந்திரா என தனது முதல் படமே மிரட்டலாக இருக்க வேண்டும் என்று சஞ்சய் மாஸ்டர் பிளான் போட்டு சிந்தித்து காய்களை நகர்த்தி வருவதாக சினிமா வட்டாரத்தில் அவரை புகழ்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X