Leo bayilvan ranganathan Review: லோகேஷ் என்னய்யா இப்படி பண்ணிட்ட.. பயில்வானின் லியோ விமர்சனம்!
சென்னை: தளபதி விஜய் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள லியோ படம் குறித்து நடிகர் பயில்வான் ரங்கநாதனின் விமர்சனம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, ஆக்ஷன் கிங் அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், கவுதம் மேனன் உள்ளிட்டோர் நடித்த லியோ படம் இன்று தியேட்டரில் வெளியானது.
லியோ படம் ஓடும் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது. விஜய்யின் பேனர்களுக்கு மாலை அணிவித்து, பாலாபிஷேகம் செய்து ரசிகர்கள் அமர்க்களப்படுத்தினார்கள்
பாட்ஷா படம் போல: இந்நிலையில் லியோ படம் குறித்து பயில்வான் ரங்கநாதன் விமர்சனம் அளித்துள்ளார். அதில், லியோ படம் கிட்டத்தட்ட பாட்ஷா படம் போலத்தான் இருக்கு. பாட்ஷா படத்தில் தாதாவாக இருந்த ரஜினி, சாதாரண ஆட்டோ ஓட்டுனராக இருந்தாரே அதைப்போலத்தான் லியோ படத்திலும் காஷ்மீரில் இரண்டு குழந்தைக்கு தந்தையாக நடித்துள்ளார் விஜய். த்ரிஷாவும் இரண்டு குழந்தைகளுக்கு அம்மா என்பதால் இழுத்து போத்திக் கொண்டு சாதாரணமாக நடித்துள்ளார். த்ரிஷாவின் கவர்ச்சி இல்லாததால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சண்டையில் அதிரிபுதிரி: மற்ற திரைப்படங்களை விட இந்த திரைப்படத்தில் விஜய் அட்டகாசமாக நடித்து இருக்கிறார். அதேபோல ஆக்ஷன் ஹீரோ என்றால் அது விஜய் தான் என்று சொல்லும் அளவிற்கு சண்டை காட்சியில் அதிரிபுதிரி செய்துவிட்டார். ஒவ்வொரு சண்டை காட்சியில் வித்தியாச வித்தியாசமாக இருப்பதால், விஜய்க்கு ஒரு கம்பீரம் கிடைத்து இருக்கிறது. இந்த படத்தில் ஆக்ஷன் ஹீரோ என்கிற சிம்மாசனத்தில் கம்பீரமாக கால்மேல் கால் போட்டு அமர்ந்து இருக்கிறார் விஜய்.

பணத்திற்கு வேட்டு: இமாச்சல பிரதேசத்தில் 40நாட்கள் ஷூட்டிங் நடந்து இருக்கு, அந்த இடத்தில் நிறைய அழகான இடங்கள் நிறைய இருக்கும் போது, பங்களாவையும் பள்ளிக்கூடத்தை மட்டுமே காட்டி இருக்கிறார். இது இயல்பாகவே இல்லை. இது தான், மேலும் தயாரிப்பாளர் லலித்குமாரின் பணத்திற்கு வேட்டு வைத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
புதுமை இல்லை: இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ், தனது புத்திக் கூர்மையை அதிகமாகவும், ஆழமாகவும் பயன்படுத்தவில்லை. ஸ்கிரீன் பிளே நன்றாக இருந்தாலும், புதுமையாக இல்லை, விறுவிறுப்பு இருக்கு பரபரப்பு இருக்கு ஆனால், எந்தக்காட்சியும் புதுமையாக இல்லை என்பது லியோ படத்தின் மிகப்பெரிய குறைவு தான். இந்த படத்தை நம்மை உங்காத்து பார்க்க வைத்ததே சண்டை இயக்குநர் அன்பறிவு தான். சண்டை படம் உங்களுக்கு பிடிக்குமா கண்டிப்பா லியோ படம் உங்களுக்கு பிடிக்கும்.


Click it and Unblock the Notifications











