GOAT Trailer: அண்ணன் வரார் வழிவிடு.. அதிரடி காட்டிய விஜய்.. மாஸாக வெளியான டிரைலர்!

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் ஹீரோவாக நடித்துள்ள கோட் திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் வெளியாகி உள்ளது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் கோட். விஜய் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். இதில், நடிகர் விஜய்க்கு ஜோடியாக இளம் நடிகை மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், பிரசாந்த், பிரபுதேவா, நிதின் சத்யா, அஜ்மல், பிரேம்ஜி, வைபவ், பார்வதி நாயர், யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.

GOAT vijay trailer

தளபதி விஜய்யின் கோட்: கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். அவர் இசையில் நடிகர் விஜய் இரண்டு பாடல்களை பாடி உள்ளார். அதில் முதல் பாடலான விசில் போடு பாடல், கடந்த ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆனது. அப்பாடலுக்கு பெரியளவில் வரவேற்பு கிடைக்காததை அடுத்து, சின்ன சின்ன கண்கள் என்கிற மெலடி பாடல் அடுத்ததாக வெளியானது. அப்பாடலை விஜய்யுடன் சேர்ந்து பவதாரிணி பாடி இருந்தார். அவரது குரலை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் யுவன்ரங்கர் ராஜா பயன்படுத்தி இருந்தார்.

GOAT vijay trailer

ட்ரோலான பாடல்: கோட் படத்தின் மூன்றாவது பாடலாக யுவன் சங்கர் ராஜா பாடிய ஸ்பார்க் பாடல் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியானது. அப்படத்தில் நடிகர் விஜய்யின் டீஏஜிங் லுக்கை பார்த்த நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்தனர். நடிகர் விஜய் இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அதில் இளம் வயது கதாபாத்திரமும் ஒன்று, அதை டீ ஏஜிங் டெக்னாலஜியை பயன்படுத்தி விஜய்யை இளமையாக காட்டி இருக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 5ந் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையொட்டி தியேட்டரில் வெளியாக உள்ளது.

GOAT vijay trailer

டிரைலர் வெளியானது: இந்நிலையில், சற்று முன் கோட் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. அட்டகாசமாக வெளியாகி உள்ள அந்த டிரைலரின் ஆரம்பத்தில் அண்ணன் வரார் வழிவிடு என்று எழுத்துக்களுடன், அதிரடியான ஆக்ஷன் காட்சிகளுடன் டிரைலர் பட்டையை கிளப்புது. டிரைலரைப் பார்த்த ரசிகர்கள் இதை ஷேர் செய்து டிரெண்டாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X