வேற யாரு தளபதி விஜய் தான்.. ரசிகர்கள் ரிப்ளை.. மாஸ்டர் சிங்கிள்.. மாஸா வருது ஒரு குட்டி கதை!

சென்னை: மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான "ஒரு குட்டி கதை" பாடலை யார் பாடியிருப்பா கண்டுபிடிங்கன்னு ரசிகர்களுக்கு ஒரு போட்டி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது, மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ஒரு குட்டி கதை பாடலை நடிகர் விஜய் தான் பாடியுள்ளார் என்பதை படக்குழு ரிவீல் செய்துள்ளது.

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான "ஒரு குட்டி கதை" பாடல் வரும் வெள்ளியன்று ரிலீசாக உள்ளது.

காதலர் தினத்தை முன்னிட்டு தளபதி ரசிகர்களுக்கு லவ்லி ட்ரீட் கொடுக்க இசையமைப்பாளர் அனிருத் அந்த பாடல் வேலையில் படு பிசியாக உழைத்து வருகிறார்.

யார் பாடியிருப்பா?

தயாரிப்பு நிறுவனமான XB பிலிம் கிரியேட்டர்ஸ் அதற்கு க்ளூவாக, அந்த பாட்டை பாடியிருப்பவர், ரசிகர்களின் நெஞ்சுக்கு மிகவும் நெருங்கியவர் என்றும் கூறியுள்ளது. ரசிகர்கள் நெஞ்சில் குடியிருப்பது, வேற யாரு, நம்ம தளபதி விஜய் தான் என ரசிகர்கள் பலரும் கமெண்ட் போட்டு Firt Single என்ற ஹாஷ்டேக்கையும் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

வெயிட்டிங்கிலேயே

அட்லீ இயக்கத்தில் வெளியான பிகில் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில், "நெஞ்சுக்குள்ள குடியிருக்கும்.. நம்ம சனம் வெறித்தனம்" என்ற பாடலை நடிகர் விஜய் பாடியிருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள "ஒரு குட்டி கதை" பாடலையும் நடிகர் விஜய் பாடியிருப்பார் என்ற தகவல் அறிந்ததும், தளபதி ரசிகர்கள், வெயிட்டிங்கிலேயே வெறி ஏறுது என கமெண்ட் செய்து வருகின்றனர்.

தளபதி தான்

தயாரிப்பு நிறுவனமான சேவியர் பிரிட்டோ பிலிம்ஸ் சார்பில் கேட்கப்பட்டுள்ள இந்த கேள்விக்கு ரசிகர்கள் பலரும், தளபதி தான், வேற யாரு என கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், இசையமைப்பாளர் அனிருத்திடம் பிஜிஎம் தெறியாக இருக்கணும் என அன்பு கோரிக்கையும் செல்ல மிரட்டல்களையும் வைத்து வருகின்றனர்.

ஒரே ஒருத்தர் தான்

ரசிகர்களின் இதயத்திற்கு நெருக்கமாக இருப்பது ஒரே ஒருத்தர் தான் அது எங்க அண்ணன் தளபதி விஜய் தான் என தளபதி ரசிகர்கள் கமெண்ட்டுகளை தெறிக்க விட்டு வருகின்றனர். சிங்கிள் வெளியிடுவதற்கு முன்னதாகவே அந்த பாடகர் யார் என்ற அப்டேட்டும் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன் & ஒன்லி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி மிரட்டலில் உருவாகி இருக்கும் மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் பிப்ரவரி 14ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகிறது. ஒரு குட்டி கதை என தொடங்கும் அந்த பாடலை ஒன் அண்ட் ஒன்லி தளபதி விஜய் தான் பாடியிருப்பார் என ரசிகர்கள் ஆணித்தரமாக அடித்து சொல்லி வருகின்றனர்.

அடுத்த செல்ஃபி புள்ள

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிப்பில் வெளியான கைதி படத்திற்கு கடைசியாக அனிருத் - விஜய் கூட்டணி அமைந்திருந்தது. அனிருத் இசையில் விஜய் குரலில் வெளியான செல்ஃபி புள்ள பாடல் பட்டித் தொட்டி எங்கும் ஒலித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்நிலையில், அடுத்த செல்ஃபி புள்ள பாடலாக இந்த காம்போ பாடல் உருவாகும் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

தனுஷா இருந்தா?

அனிருத் இசையில் நடிகர் தனுஷ், அந்த ஒரு குட்டி கதை பாடலை பாடி இருந்தா செம்மையா இருக்கும் என இந்த தனுஷ் ரசிகர் கமெண்ட் செய்துள்ளார். அப்படி இருந்தாலும், செம்மையா தான் இருக்கும். ஆனால், நிச்சயமாக தளபதி விஜய் தான் இந்த பாடலை பாடி இருப்பார் என்று விஜய் ரசிகர்கள் தொடர்ந்து ரிப்ளை செய்து வந்தனர். இந்நிலையில், தளபதி விஜய் தான் பாடியுள்ளார் என சேவியர் பிரிட்டோ அறிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X