Vijay Son - சினிமாவை விடுங்க.. அவனுக்கு பிடித்தது இதுதான்.. சஞ்சய் பற்றி விஜய் சொன்னது என்ன?

சென்னை: Jason Sanjay (ஜேசன் சஞ்சய்) தனது மகனுக்கு பிடித்த விஷயம் குறித்து நடிகர் விஜய் பேசியிருக்கும் விஷயம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

கோலிவுட்டின் முன்னணி ஹீரோவான விஜய் இப்போது லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதற்கு முன் அவர் நடிப்பில் வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய இரண்டு படங்களின் ரிசல்ட்டுமே விஜய்க்கு அப்செட்டைத்தான் கொடுத்தன. இதன் காரணமாக லியோ படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார் தளபதி.

Thalapathy Vijay Talks about his son Jason Sanjay

சூடுபிடிக்கும் இறுதி பணிகள்: படத்தின் ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிவடைந்தது. படம் ரிலீஸாக இன்னும் ஒரு மாதமே இருக்கிறது. இதனால் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடித்திருக்கின்றன. கடந்த சில நாட்களாக தொடர்ந்து போஸ்டர்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் தேதி நடக்கலாம் என கூறப்படுகிறது. படமானது இதுவரை 450 கோடி ரூபாய்க்கு மேல் வியாபாரம் ஆகியிருப்பதாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.

தளபதி 68 : லியோ படத்துக்கு பிறகு விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68 ஆவது படத்தில் நடிக்கவிருக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் இசையமைக்கிறார். படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. சமீபத்தில் அமெரிக்கா சென்ற விஜய் அங்கு 3டியில் தனது முழு உடலை ஸ்கேன் செய்துகொண்டார். ஷூட்டிங் லியோ ரிலீஸுக்கு பிறகு தொடங்கவிருக்கிறது.

ஜேசன் சஞ்சய்: இந்த சூழலில் விஜய் வீட்டிலிருந்து இரண்டாவதாக ஒரு இயக்குநர் வந்திருக்கிறார். கனடா, லண்டனில் இயக்கம் தொடர்பான படிப்பை படித்திருக்கும் ஜேசன் சஞ்சய் லைகா நிறுவனம் தயாரிப்பில் தனது முதல் படத்தை இயக்கவிருக்கிறார். படம் குறித்த மேலதிக விவரங்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன. அனேகமாக கவின் ஹீரோவாக நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

விஜய் பேச்சு: இந்நிலையில் தனது மகன் ஜேசன் சஞ்சய் குறித்து விஜய் பேசியிருக்கும் விஷயம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அவர் பல வருடங்களுக்கு முன்பு கொடுத்த பேட்டியில், "சஞ்சய்க்கு சிறு வயது முதலே கிரிக்கெட் என்றால் ரொம்பவே பிடிக்கும். கிரிக்கெட்டை பார்ப்பதோடு மட்டுமில்லாமல் நன்றாக விளையாடவும்கூடியவர். பள்ளி அளவிலும் அவர் கிரிக்கெட் விளையாடியிருக்கிறார்" என்றார்.

நடிகராக?: ஜேசன் சஞ்சய் அவரது தந்தை போல் நடிகராக வருவார் என்றுதான் முதலில் பெரும்பாலானோரால் கருதப்பட்டது. ஆனால் கேமராவுக்கு முன் நிற்பதைவிட கேமராவுக்கு பின் இருப்பதை அவர் விரும்பிவிட்டார். இருந்தாலும் விஜய்யுடன் அவர் போக்கிரி, வேட்டைக்காரன் ஆகிய படங்களின் பாடலில் தோன்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X