Thalapathy Vijay: "அண்ணன் வரார் வழிவிடு..” தளபதியின் ஹை-வால்டேஜ் என்ட்ரி... ஆர்ப்பரித்த ரசிகர்கள்
சென்னை: லியோ படத்தின் வெற்றி விழா நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த வெற்றி விழாவில் ஆயிரக்கணக்கான விஜய் ரசிகர்கள் பங்கேற்றுள்ளனர்.
நேரு ஸ்டேடியத்துக்கு பகல் 2 மணிக்கே வருகை தந்த விஜய், தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் விஜய் விழா மேடையில் செம்ம கெத்தாக என்ட்ரி கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.

அண்ணன் வரார் வழிவிடு
விஜய் - லோகேஷ் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவான லியோ திரைப்படம், கடந்த மாதம் 19ம் தேதி வெளியானது. லலித் குமார் தயாரிப்பில் அனிருத் இசையமைத்த இந்தப் படம், LCU-ன் கீழ் உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. விஜய்யுடன் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், கெளதம் மேனன், மேத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர், ப்ரியா ஆனந்த், ஜார்ஜ் மரியான் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது.
லியோ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் இதுவரை 550 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. முன்னதாக இந்தப் படம் ஆயிரம் கோடி வரை கலெக்ஷன் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை என தயாரிப்பாளர் லலித் குமாரே கூறிவிட்டார். இன்னொரு பக்கம் லியோ தோல்வியடைந்துவிட்டதாகவும், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தியேட்டர் உரிமையாளர்களுக்கு நஷ்டம் கொடுத்துவிட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக லியோ வெற்றி விழா கொண்டாட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில் விஜய், லோகேஷ் கனகராஜ், அனிருத், த்ரிஷா, மிஷ்கின் உள்ளிட்ட லியோ படக்குழுவினர் கலந்துகொண்டுள்ளனர். மேலும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், ரசிகர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் திரண்டுள்ளனர்.
லியோ சக்சஸ் மீட் பாஸ், ஆதார் கார்டு என ஏராளமான கட்டுப்பாடுகளுடன் தான் ரசிகர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்காக விஜய் பகல் இரண்டு மணிக்கே நேரு ஸ்டேடியம் வந்துவிட்டாராம். இதனையடுத்தே மற்ற பிரபலங்கள் விழா அரங்கிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் நிகழ்ச்சி தொடங்கியதும் விஜய் விழா மேடையில் என்ட்ரி கொடுத்தது டிவிட்டரில் வைரலாகி வருகிறது.

லியோ படத்தின் Badass பாடலின் பிஜிஎம் உடன் செம்ம மாஸ்ஸாக என்ட்ரி கொடுத்துள்ளார் விஜய். அதோடு ரசிகர்கள் முன்னிலையில் ஒரு ராஜநடை போட்டு வைப் கொடுக்க, நேரு ஸ்டேடியமே அதிரும் வகையில் ரசிகர்கள் ஆர்ப்பரிக்கின்றனர். இந்த வீடியோக்கள் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களையும் அதிர வைத்துள்ளன. விஜய் கெத்தாக என்ட்ரி கொடுத்த வீடியோ, போட்டோக்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











