GOAT Update: இன்னைக்கு கண்டிப்பா வந்துடும்.. நொந்துபோன ரசிகர்களுக்கு வாக்கு கொடுத்த வெங்கட் பிரபு
சென்னை: விஜய் நடிப்பில் உருவாகி அடுத்து ரிலீஸாகவுள்ள படம் தி கோட். இந்த படத்தினை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் மூன்று பாடல்கள் ஏற்கனவே ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்கள் மத்தியில் கலவையான வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் படத்தின் ட்ரைலர் எப்போது ரிலீஸ் செய்யப்படும் என்ற அறிவிப்பை படக்குழு நேற்று அறிவிக்க திட்டமிட்டிருந்தது. இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
நேற்று அதாவது ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை 6 மணிக்கு ட்ரைலர் ரிலீஸ் குறித்த அப்டேட் வரும் என தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டதால், ரசிகர்கள் அலாரம் வைத்து காத்துக்கொண்டு இருந்தனர். ஆனால் ட்ரைலர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. அதேநேரத்தில் படக்குழு தரப்பில் இருந்து புது போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டது. அதில் போஸ்டரில் கோட் படத்தில் நடித்துள்ள விஜய், சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், யோகிபாபு, லைலா, பிரேம் ஜி, காளிதாஸ் வைபவ் உள்ளிட்டோர் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டரைப் பார்த்த ரசிகர்கள் அதனை கொண்டாடினர்.

கடுப்பான ரசிகர்கள்: மேலும் இந்த போஸ்டர் ரசிகர்கள் கொண்டாடிக்கொண்டும் டீ-கோட் செய்துகொண்டும் இருக்கும்போது, ட்ரைலர் ரிலீஸ் குறித்த அப்டேட் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. ஏற்கனவே ரிலீஸ் செய்யப்பட்ட பாடல்களே ரசிகர்களுக்கு அப்செட்டைக் கொடுத்த நிலையில், ட்ரைலர் நல்லபடியாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் காத்துக்கொண்டு இருந்த ரசிகர்களுக்கு, ட்ரைலர் குறித்த அப்டேட் வரும் என நேற்று நள்ளிரவு வரை காத்திருந்த ரசிகர்களுக்கு பல்ப்-தான் கிடைத்தது.

வெங்கட் பிரபு: இந்நிலையில் படத்தின் இயக்குநர் வெங்கர் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் இன்றைக்கு (ஆகஸ்ட் 15) படத்தின் ட்ரைலர் அப்டேட் நிச்சயம் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். வெங்கட் பிரபு தனது பதிவில், " இன்னைக்கு கண்டிப்பா வந்துடும்"எனத் தெரிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் இன்றைக்கும் எதாவது சொதப்பல் நடைபெற்றுவிடுமோ என்ற அச்சத்திலும் ரசிகர்கள் இருக்கின்றனர்.

கதை இதுவா? தி கோட் படத்தின் கதை என்பது கற்பனைக் கதைதான் என்றாலும் உண்மைக்கு நெருக்கமாக இந்த கதையை படமாக்கி இருக்கின்றோம். RAW அமைப்புடன் இணைந்து வேலை செய்யும் குழுவின் பெயர் SATS. இந்த குழுவுல இருந்த அனைவரும் ஒரு காலத்துல மிகவும் துணிச்சலாக செய்த செயல் ஒன்று இன்றைக்கு மிகப்பெரிய பிரச்னையாக அவர்களுக்கு எதிராக மாறி நிற்கின்றது. இந்த பிரச்னையை அவர்கள் எப்படி எதிர்கொண்டு வெல்கின்றார்கள் என்பதுதான் படத்தின் மைய்யக்கதை. படம் முழுக்க ஆக்ஷன்தான். தளபதி விஜய் ரசிகர்கள், தளபதியை எப்படியெல்லாம் பார்க்கவேண்டும் என நினைத்தார்களோ அவை அனைத்தும் இந்தப் படத்தில் இருக்கும். ரசிகர்களுக்கு படத்தில் பல சஷ்பன்ஸ் காத்திருக்கு. படத்துக்குள்ள வந்துட்டாலே ரசிகர்களுக்கு திருவிழாதான்" என படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











