GOAT: ட்ரைலர் அப்டேட் இல்லை போலயே.. இந்த போஸ்டர்தான் அப்டேட்டா.. ரசிகர்கள் அப்செட்
சென்னை: தளபதி விஜய் நடிப்பில் உருவாகி அடுத்து ரிலீஸாகவுள்ள படம் தி கோட். இந்த படத்தினை வெங்கட் பிரபு இயக்குகியுள்ளார். மேலும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் மூன்று பாடல்கள் ஏற்கனவே ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்கள் மத்தியில் கலவையான வரவேற்பைப் பெற்றது. இந்நிலையயில் படத்தின் ட்ரைலர் எப்போது ரிலீஸ் செய்யப்படும் என்ற அறிவிப்பை படக்குழு தெரிவிக்கும் என காத்திருந்த ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம்தான்.
6 மணிக்கு ட்ரைலர் ரிலீஸ் குறித்த அப்டேட் வரும் என தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டதால், ரசிகர்கள் அலாரம் வைத்து காத்துக்கொண்டு இருந்தனர். ஆனால் ட்ரைலர் ரிலீஸ் தேதியை அறிவிப்பதற்கு முன்னதாக படக்குழு தரப்பில் இருந்து புது போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அதில் படத்தில் நடித்துள்ள விஜய், சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், யோகிபாபு, லைலா, பிரேம் ஜி, காளிதாஸ் வைபவ் உள்ளிட்டோர் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டரைப் பார்த்த ரசிகர்கள் அதனை கொண்டாடினர்.

கடுப்பான ரசிகர்கள்: மேலும் இந்த போஸ்டர் ரசிகர்கள் கொண்டாடிக்கொண்டும் டீ-கோட் செய்துகொண்டும் இருக்கும்போது, ட்ரைலர் ரிலீஸ் குறித்த அப்டேட் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியுள்ளது. ஏற்கனவே ரிலீஸ் செய்யப்பட்ட பாடல்களே ரசிகர்களுக்கு அப்செட்டைக் கொடுத்த நிலையில், ட்ரைலர் நல்லபடியாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் காத்துக்கொண்டு இருந்த ரசிகர்களுக்கு, ட்ரைலர் குறித்த அப்டேட் இதுவரை வெளிவரவில்லை. அதாவது மாலை 6 மணிக்கு வெள்யிடுவதாக சொன்ன படக்குழு இரவு 8.30 மணி வரை அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. இது ரசிகர்களை கடுப்பேற்றியுள்ளது.
ஐ மேக்ஸ்: படம் வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்தப் படத்தினை படக்குழு ஐ மேக்ஸ் ஸ்கீரினில் ரிலீஸ் செய்யவுள்ளது என்ற தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே தெரிவித்திருந்தது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்த வேண்டாம் என படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த செய்தி ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்திய நிலையில், ஐமேக்ஸ் ஸ்கீரின் தி கோட் படம் ரிலீஸ் ஆகவுள்ளது என்ற தகவல் தளபதி ரசிகர்களுக்கு ஏற்கனவே மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் வெங்கட் பிரபு தரப்பில் இருந்து வெளுயான தகவல் ரசிகர்களை இன்னும் மேலும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

கதை இதுவா? தி கோட் படத்தின் கதை என்பது கற்பனைக் கதைதான் என்றாலும் உண்மைக்கு நெருக்கமாக இந்த கதையை படமாக்கி இருக்கின்றோம். RAW அமைப்புடன் இணைந்து வேலை செய்யும் குழுவின் பெயர் SATS. இந்த குழுவுல இருந்த அனைவரும் ஒரு காலத்துல மிகவும் துணிச்சலாக செய்த செயல் ஒன்று இன்றைக்கு மிகப்பெரிய பிரச்னையாக அவர்களுக்கு எதிராக மாறி நிற்கின்றது. இந்த பிரச்னையை அவர்கள் எப்படி எதிர்கொண்டு வெல்கின்றார்கள் என்பதுதான் படத்தின் மைய்யக்கதை. படம் முழுக்க ஆக்ஷன்தான். தளபதி விஜய் ரசிகர்கள், தளபதியை எப்படியெல்லாம் பார்க்கவேண்டும் என நினைத்தார்களோ அவை அனைத்தும் இந்தப் படத்தில் இருக்கும். ரசிகர்களுக்கு படத்தில் பல சஷ்பன்ஸ் காத்திருக்கு. படத்துக்குள்ள வந்துட்டாலே ரசிகர்களுக்கு திருவிழாதான்" என கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications