GOAT: பாக்ஸ் ஆஃபீஸில் நின்னு பேசும் தளபதியின் கோட்.. தயாரிப்பாளர் என்ன சொல்லி இருக்காங்க பாருங்க!

சென்னை: தளபதி விஜய் கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்து வெளியாகியுள்ள படம் தி கோட். இந்தப் படம் இந்தியா மட்டும் இல்லாமல் 40க்கும் மேற்பட்ட வெளிநாடுகளிலும் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. படம் நேற்று முன்தினம் அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தினை தமிழ்நாடு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக படத்தினைப் பார்த்த ரசிகர்கள் அழகிய தமிழ் மகன் படத்திற்குப் பின்னர் விஜய்யை நெகடிவ் கதாபாத்திரத்தில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது என கூறி வருகின்றனர். படம் முதல் நாளே உலகம் முழுவதும் ரூபாய் 126.32 கோடிகளை வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

goat vijay archana kalpathi

அர்ச்சனா கல்பாத்தி விஜய்யின் தீவிர ரசிகர். இதனால் படத்தின் புரோமோசன் வேலைகளை தானே முன் நின்று கவனித்துக் கொண்டார். மேலும், படத்தினை அதிக திரைகளில் ரிலீஸ் செய்ய பெரும் சிரத்தை மேற்கொண்டார். இதுமட்டும் இல்லாமல் தமிழ்நாட்டில் அதிகாலையே படத்தை ரிலீஸ் செய்ய முயற்சி செய்தார். ஆனால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. படத்திற்கு இசை வெளியீட்டுவிழா நடத்தப்படவில்லை என்றாலும், படத்தினை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்தார்.

goat vijay archana kalpathi

இதுமட்டும் இல்லாமல், முதலில் டி-ஏஜிங் செய்யப்பட்ட விஜய் குறித்து ரசிகர்களுக்கு அதிருப்தி ஏற்படவே, மீண்டும் பணம் செலவு செய்து டீ- ஏஜிங் செய்தார். இப்படி இந்தப் படத்தினை கிட்டத்தட்ட ரூபாய் 400 கோடி ரூபாய் செலவில் உருவாக்கியுள்ளார். இதில் விஜய்யின் சம்பளம் மட்டும் ரூபாய் 200 கோடி ரூபாய். படம் பார்க்க சென்னையில் உள்ள பிரபல திரையரங்கிற்கு வந்த அர்ச்சனா கல்பாத்தி, அவரது சகோதரி ஐஸ்வர்யா கல்பாத்தி என அனைவரும் ரசிகர்களின் கூட்டத்தினால், தங்களது காரினை எடுக்க முடியாமல், ஆட்டோ பிடித்துச் சென்றனர்.

goat vijay archana kalpathi

வசூல் விபரம்: படத்தின் மொத்த பட்ஜெட்டே ரூபாய் 400 கோடிதான். இதில் முதல் நாளே படம் ரூபாய் 126.32 கோடி வசூல் செய்துவிட்டதால், இந்த வார இறுதிக்குள் படம் கிட்டத்தட்ட ரூபாய் 500 கோடி வசூல் செய்துவிடும் என கூறப்படுகின்றது. இது படத்தினை தயாரித்த தயாரிப்பு நிறுவனத்திற்கு லாபத்தை அசால்ட்டாக ஈட்டிக் கொடுத்துவிடும் என கூறுகின்றனர். இந்நிலையில் படம் இரண்டாவது நாளில் இந்தியா முழுவதும் பாக்ஸ் ஆஃபீஸில், ரூபாய் 25 கோடி வசூல் செய்ததாக பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

goat vijay archana kalpathi

வீக் எண்ட்: ஆனால் படம் உலகம் முழுவதும் எப்படியும் ரூபாய் 100 கோடிகளை வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது. இதனல் முதல் இரண்டு நாளில் படம் ரூபாய் 230 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்திருக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகின்றது. மேலும் இன்றும் நாளையும் விநாயகர் சதூர்த்தி மற்றும் வார இறுதி நாள் என்பதால், படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என படக்குழு நம்புகின்றது.

goat vijay archana kalpathi

அர்ச்சனா கல்பாத்தி: இப்படியான நிலையில் அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் பக்கத்தில், " Thalapathy Takeover at the BoxOffice 🔥🔥 G.O.A.T" என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் படத்தின் வசூல் முதல் நாளை விட அதிகமாக இரண்டாவது நாளில் வசூல் செய்திருப்பதால்தான் அர்ச்சனா இவ்வாறு எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாக பலர் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X