GOAT Box Office Day 3: பைசா வசூல்! ஆல் ஏரியாலையும் தளபதிதான் கில்லி.. கோட் 3வது நாள் வசூல் விபரம்
சென்னை: தளபதி விஜய் அழகிய தமிழ் மகன் படத்திற்குப் பின்னர், பெரும் இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் தி கோட். இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி கடந்த 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியுள்ள இந்தப் படத்திற்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தினை சுமார், ரூபாய் 400 கோடி செலவில் ஏ.ஜி.எஸ். எண்டர்டைமெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இதில் விஜய்க்கு சம்பளம் மட்டும் ரூபாய் 200 கோடி என தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி பேட்டி ஒன்றில் தெரிவித்தார். படம் வெளியாகி இன்று வரை அதாவது செப்டம்பர் 8ஆம் தேதி வரை நான்கு நாட்கள் ஆகின்றது. இந்நிலையில் முதல் மூன்று நாளில் கோட் படம் பாக்ஸ் ஆஃபீஸில் எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

தளபதி விஜய் இரட்டை வேடங்களில் நடித்து, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸான படம்தான் கோட். இந்தப் படத்தில் விஜய்யுடன் சினேகா, பிரபுதேவா, பிரசாந்த், ஜெய்ராம், அஜ்மல், லைலா, மீனாட்சி சௌத்ரி, மைக் மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்கள் மட்டும் இல்லாமல் படத்தின் இரண்டாம் பாதியில் இடம் பெற்றுள்ள மட்ட பாடலில் நடிகை த்ரிஷா நடனமாடியுள்ளார். மேலும், க்ளைமேக்ஸில் நடிகர் சிவகார்த்திகேயன் கேமியோ கதாபாத்திரம் செய்துள்ளார். அதேபோல் மறைந்த நடிகர் விஜயகாந்த் நடித்துள்ளதைப் போல், ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயபடுத்தி காட்சி அமைக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

படத்திற்கு இசை வெளியீட்டு விழா வைக்கவில்லை என்றாலும், படம் குறித்து ஊடகங்களுக்கு படக்குழுவினர் அளித்த ஒவ்வொரு பேட்டியிலும், இந்தப் படம் விஜய் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமையும், அதேநேரத்தில் அனைத்து ரசிகர்களையும் படத்தில் திருப்தி படுத்தும் காட்சிகள் உள்ளது எனக் கூறியிருந்தனர். அதேபோல், படையாப்பா பி.ஜி.எம், குணா பட வசனம், மங்காத்தா பி.ஜி.எம், தூள் பட பாடல் வரிகள், கில்லி பட அப்படி போடு டேன்ஸ், மகேந்திர சிங் தோனி என பல காட்சிகள் படத்தில் இருந்தது.

அரசியல்: நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி முழுக்க முழுக்க அரசியலுக்குச் செல்லவுள்ளதால், கோட் படம் அவரது கடைசி இரண்டாவது படமாக அமைந்துள்ளது. கோட் படத்திற்குப் பின்னர் இயக்குநர் ஹெச். வினோத் இயக்கும் படத்தில் நடிக்கின்றார். இதனால் கோட் படத்தைப் பார்த்த பல விஜய் ரசிகர்கள் வெங்கட் பிரபு, தளபதிக்கு செம ஃபேர்வெல் படம் கொடுத்துள்ளார்.

அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும் எனக் கூறினர். அதேநேரத்தில் அரசியலுக்கு வரும் நேரத்தில் எதற்காக இந்தமாதிரி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவேண்டும் எனவும் சில ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

வேகமான திரைக்கதை: படத்தின் இடைவெளிக் காட்சி, அதன் பின்னர் விஜய்யின் ட்ரேட் மார்க் வசனமான ஐ அம் வெய்ட்டிங் எனும் வசனம் இடம் பெற்ற காட்சிகள் எல்லாம் தியேட்டரில் ஒருவர் கூட சிட்டில் அமர்ந்திருக்கவில்லை எனக் கூறும் அளவிற்கு இருந்தது. படம் மூன்று மணி நேரம் ஓடினாலும், வேகமான திரைக்கதையால் ரசிகர்களுக்கு போர் அடிக்கவில்லை என்றே கூறலாம்.

ரிலீஸ் விபரம்: படத்தினைப் பொறுத்தவரையில் முதல் நாளே கிட்டத்தட்ட 7000 ஸ்க்ரீன்களில் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது. இதுமட்டும் இல்லாமல், தமிழ் நாட்டில் மட்டும் 1,100 திரையரங்குகளில் படம் சோலோவாக ரிலீஸ் ஆனது. 40க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் படம் ரிலீஸ் ஆனது. இப்படியான நிலையில், படம் முதல் நாளில் ரூபாய் 126.32 கோடிகளை வசூல் செய்ததாக, படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும், இரண்டாவது நாளில் இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட ரூபாய் 30 கோடிகள் வசூல் செய்ததாக பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரண்டாவது நாளிலும் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் படம் வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது. .

வசூல்: இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி தினமான நேற்று, மீண்டும் படத்தின் வசூல் அதிகரித்துள்ளது. அதாவது படம் இந்தியாவில் மட்டும் ரூபாய் 35 கோடிகளை வசூல் செய்திருப்பதாகவும், உலகம் முழுவதும் 100 கோடிகளை அள்ளியிருக்கும் எனவும் கூறப்படுகின்றது. இதனால் படம் முதல் மூன்று நாட்களில் ரூபாய் 280 கோடியில் இருந்து ரூபாய் 300 கோடிகள் வரை வசூல் செய்திருக்க வாய்ப்புள்ளதாக பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் குறித்து படக்குழு விரைவில் தெரிவிக்கும் என பலர் காத்துக்கொண்டு உள்ளனர்.


Click it and Unblock the Notifications











