விஜய்க்கு எவ்ளோ பெரிய தாராள மனசு.. ’கோட்’ல எஸ்.கே கேமியோ இன்னொரு சீன் இருக்கு.. வெங்கட் பிரபு ஓபன்!

சென்னை: தளபதி விஜய் கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்து வெளியாகியுள்ள படம் தி கோட். இந்தப் படம் இந்தியா மட்டும் இல்லாமல் 40க்கும் மேற்பட்ட வெளிநாடுகளிலும் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. படம் நேற்று முன் தினம் அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தினை தமிழ்நாடு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக படத்தினைப் பார்த்த ரசிகர்கள் அழகிய தமிழ் மகன் படத்திற்குப் பின்னர் விஜய்யை நெகடிவ் கதாபாத்திரத்தில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது என கூறி வருகின்றனர். படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோவாக நடித்திருந்தார். இது பலருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தது. இப்படியான நிலையில், படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு பல சுவாரஸ்யமான விசயங்களை பேசியுள்ளார். அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

கோட் படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார். இப்படத்தில் இவருடன், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், ஜெய்ராம், மைக் மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, பிரேம் ஜி, வைபவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் படத்தில் கேமியோவாக நடித்துள்ளார். மட்ட பாடலுக்கு த்ரிஷா நடனமாடியுள்ளார்.

goat vijay venkat prabhu

இதுமட்டும் இல்லாமல் காதலின் தீபம் ஒன்று பாடல், படையப்பா தீம் மியூசிக் ரஜினி ரசிகர்களைக் கவரவும், குணா பட வசனம் கமல் ரசிகர்களைக் கவரவும், மங்காத்தா தீம் அஜித் ரசிகர்களைக் கவரவும், தூள் பட பாடல் விக்ரம் ரசிகர்களைக் கவரவும், மறைந்த நடிகர் விஜயகாந்த் கதாபாத்திரம் அவரது ரசிகர்களைக் கவரவும் படத்தில் இயல்பாகவே திரைக்கதையில் ஒரு காட்சியாக இடம் பெற்றது. இது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸாக அமைந்தது.

goat vijay venkat prabhu

வசூல் விபரம்: படத்தின் மொத்த பட்ஜெட்டே ரூபாய் 400 கோடிதான். இதில் முதல் நாளே படம் ரூபாய் 126.32 கோடி வசூல் செய்துவிட்டதால், இந்த வார இறுதிக்குள் படம் கிட்டத்தட்ட ரூபாய் 500 கோடி வசூல் செய்துவிடும் என கூறப்படுகின்றது. இது படத்தினை தயாரித்த தயாரிப்பு நிறுவனத்திற்கு லாபத்தை அசால்ட்டாக ஈட்டிக் கொடுத்துவிடும் என கூறுகின்றனர். இந்நிலையில் படம் இரண்டாவது நாளில் இந்தியா முழுவதும் பாக்ஸ் ஆஃபீஸில், ரூபாய் 25 கோடி வசூல் செய்ததாக பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் படம் உலகம் முழுவதும் எப்படியும் ரூபாய் 100 கோடிகளை வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது. இதனல் முதல் இரண்டு நாளில் படம் ரூபாய் 230 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்திருக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகின்றது. மேலும் இன்றும் நாளையும் விநாயகர் சதூர்த்தி மற்றும் வார இறுதி நாள் என்பதால், படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என படக்குழு நம்புகின்றது.

goat vijay venkat prabhu

வெங்கட் பிரபு: இந்நிலையில் இயக்குநர் சமீபத்தில் அளித்த பேட்டியில், " சிவகார்த்திகேயன் தளபதியின் மிகப்பெரிய ரசிகர். அவர் இந்தப் படத்தில் கேமியோவாக நடிக்க விஜய் ஒப்புக்கொண்டார். மேலும் நான் படப்பிடிப்பின்போது கூறியது, இத புடிங்க சிவா, யாராவது வந்தா சுட்டுடுவேன்னு மிரட்டுங்க. ஆனா சுட்டுடாதீங்க. இனி எல்லாருடைய உயிரும் உங்க கையிலதான் இருக்கு" என பேசச் சொன்னேன். ஆனால் தளபதிதான், துப்பாக்கிய புடிங்க சிவா எனக் கூறினார். துப்பாக்கி தளபதியின் படம். அதன் பின்னர் சிவா பேசும்போது, தளபதி தம்ஸ்-அப் செய்வார். இந்த மனசு யாருக்கு வரும். தளபதியை நினைத்தால் பிரமிப்பாக உள்ளது.

goat vijay venkat prabhu

டெலிட்டேட் சீன்: மேலும், க்ளைமேக்ஸில் சிவகார்த்திகேயனுக்கும் மோகனுக்கும் இடையில் என்ன நடந்தது என்பது குறித்து எடுக்கப்பட்ட காட்சி படத்தில் சேர்க்கப்படவில்லை. அது மிகவும் அற்புதமான காட்சி. அந்தக் காட்சி டெலிட்டேட் சீன்ஸாக கட்டாயம் வெளியிடுவோம். படத்தின் நீளம் கருதி அந்தக் காட்சிகளை படத்தில் சேர்க்கவில்லை" எனக் கூறியுள்ளார். வெங்கட் பிரபுவின் இந்தப் பேச்சு, பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

goat vijay venkat prabhu

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X